வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் ‘பம்பர்’ படத்தில் நடிகர் வெற்றி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கிறார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது.

இந்த படம் திரைக்கு வரும்போது பிக்பாஸ் புகழ் ஷிவானி கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாகி விடுவார். அந்த அளவுக்கு அவர் நடிப்பும் பேசப்படும்’’ என்கிறார், இயக்குனர் எம்.செல்வக்குமார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/f7ed9396-02a2-4a5a-8070-547e9815ca6c.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/f7ed9396-02a2-4a5a-8070-547e9815ca6c-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் 'பம்பர்' படத்தில் நடிகர் வெற்றி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார் கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா...