கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாளாக பிரபுதேவா வேலை செய்கிறார். பணம் தராதவர்களை தேடிப்பிடித்து ‘அடி என்றால் அடி, அப்படியொரு முரட்டு அடி.’ திடீரென பிரபுதேவாவை தேடி வரும் ஈஸ்வரி ராவ், தன்னை அவரது அம்மா என்று கூற, அடித்து விரட்டுகிறார், பிரபுதேவா.ஆனாலும் அந்த அம்மா விடாமல் பாசத் துரத்தலை தொடர, ஒரு கட்டத்தில் தாயாக ஏற்று வீட்டோடு சேர்த்துக் கொள்கிறார்.

இந்நிலையில் ஈஸ்வரி ராவ் திடீரென்று காணாமல் போய்விட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்.

இறுக்கமான முகம். அடிதடிக்கு அஞ்சாத முரட்டுத்தனம் என அந்த அடியாள் கேரக்டருக்கு முதல் காட்சியிலேயே வலு சேர்த்து விடுகிறார், பிரபுதேவா. அம்மா என்று சொல்லி தன்னிடம் அபயம் தேடி வந்த ஈஸ்வரிராவை ஆரம்பத்தில் அடித்து துவைப்பதும் அப்புறமாய் மனம் இளகி சேர்த்துக் கொள்வதும் அரக்கனுக்குள் இருக்கும் இரக்கத்தை வெளிப்படுத்தும் இடம்.

நாயகி சம்யுக்தா தைரியமான பெண்ணாக நடிப்பில் கம்பீரம் காட்டுகிறார். நடனக்காட்சியிலோ பிரபுதேவாவுக்கும் சேர்த்து ஆட்டம் போகிறார்.

பிரபுதேவாவின் அம்மாவாக அறிமுகமாகும் ஈஸ்வரி ராவ், உண்மையில் யார்? என்பதை வெளிப்படும் இடத்தில் அதிர்ச்சி இதயம் தழுவிப் போகிறது.
யோகிபாபு சிரிக்க வைக்க,. வில்லனாக சத்ரு மிரட்டுகிறார். பரணி, இமான் அண்ணாச்சி, மாரிமுத்து பொருத்தமான தேர்வு என்பதை ஏற்ற பாத்திரங்களில் நிரூபிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவின் கேமரா கோயம்பேடு மார்க்கெட்டை படம் பிடித்திருக்கும் விதம் அழகு. அத்தனை அழகு.

சி.சத்யாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. குறிப்பாக அந்த அம்மா பாட்டு உருக்கம்.

தாய்ப்பாசம் எத்தகைய கொடிய மனம் படைத்தவனையும் மனிதனாக்கி விடும் என்ற மையக்கருவை கதையாக்கி, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஹரிகுமார், தேர்ந்த இயக்குனராக முத்திரை பதிக்கிறார். பிரபுதேவாவை இதுவரை யாரும் காட்டாத கோணத்தில் காட்டியதோடு, கோயம்பேடு மார்க்கெட்டில் நடக்கும் பண வியாபரம் பற்றி தைரியமாக சொல்லியிருப்பதற்கும் ஹாட்ஸ் ஆப்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/theal-jan-14a.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/01/theal-jan-14a-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாளாக பிரபுதேவா வேலை செய்கிறார். பணம் தராதவர்களை தேடிப்பிடித்து ‘அடி என்றால் அடி, அப்படியொரு முரட்டு அடி.’ திடீரென பிரபுதேவாவை தேடி வரும் ஈஸ்வரி ராவ், தன்னை அவரது அம்மா என்று கூற, அடித்து விரட்டுகிறார், பிரபுதேவா.ஆனாலும் அந்த அம்மா விடாமல் பாசத் துரத்தலை தொடர, ஒரு கட்டத்தில் தாயாக ஏற்று வீட்டோடு சேர்த்துக் கொள்கிறார். இந்நிலையில் ஈஸ்வரி ராவ் திடீரென்று காணாமல் போய்விட,...