நடிகர் கதிரவன் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மீண்டும்’ திரைப்படத்தை, சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்குநரும், நடிகருமான சரவண சுப்பையா இயக்கியிருக்கிறார். வருடத்தின் இறுதி நாளன்று வெளியாகும் ‘மீண்டும்’ திரைப்படம், ரசிகர்களை பார்க்க தூண்டுமா..! என்பதை இனி காண்போம்.

கதையின்படி நாயகன் கதிரவன் காவல்துறையில் ரகசிய உளவாளியாக பணியாற்றுகிறார். இவரும் நாயகி அனகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார்கள். மனைவி கருத்தரித்திருக்கும் தருணத்தில், உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய காதலனும், கணவனுமான நாயகன், உளவு வேலை ஒன்றிற்காக செல்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நாயகி அனகாவிற்கு பிரசவ தருணத்தில் உடன் யாரும் இல்லாததால் வேறு வழியில்லாமல் பெற்றோரை தேடி செல்கிறார். பெற்றோர்களோ, ‘குழந்தை பிறந்து இறந்து விட்டது என்றும், உனது கணவர் இறந்துவிட்டார் என்றும்’ நாயகியிடம் கூறிவிடுகின்றனர். ஆனால் நாயகன் கதிரவன் உளவாளி என்பதால் தன் மகனை துப்பறிந்து தேடி கண்டுபிடித்து வளர்க்கிறார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாயகி அனகா வேறு ஒருவரை ( சரவண சுப்பையா) திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் மனநல ஆலோசனை பெற மருத்துவமனை ஒன்றுக்கு வருகை தருகின்றனர். அந்த தருணத்தில் நாயகனின் மகன் அடிபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை பின் தொடர்ந்து சென்று சிகிச்சை பெறும் குழந்தை தன் வாரிசு என்பதை நாயகி அறிந்துகொள்கிறார். ஆனால் நாயகனோ அனகா மீது கோபம் கொள்கிறார். அனகாவின் இரண்டாவது கணவர் நடந்த விவரங்களை கதிரவனுக்கு விளக்குகிறார். இதுவரை உணர்வுபூர்வமாக சென்றுகொண்டிருந்த திரைக்கதை திடீரென்று ஆக்சன் பாதைக்கு திரும்புகிறது.

தொழிலதிபர் துரை சுதாகர் ரகசிய காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். அவரை விசாரணை செய்யும்பொழுது இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் சிலாகி தீவு என்ற பகுதியில் சர்வதேச குற்றவாளிகளின் ரகசிய கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இந்த கூட்டத்திற்கு உளவு பார்ப்பதாக நாயகன் பல தடைகளை மீறி செல்கிறார். அவர் வெற்றியுடன் திரும்பினாரா..? அவரது குழந்தையை தாயிடம் ஒப்படைத்தாரா..? போன்ற வினாக்களுக்கு விடை அளிக்கிறது ‘மீண்டும்’ படத்தின் திரைக்கதை.

நாயகன் கதிரவன் ரகசிய உளவாளி கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார். படத்தில் அவர் ஆடையின்றி நடித்திருப்பது அவரது துணிச்சலை காட்டுகிறது.

நாயகி அனகா இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். இனி ஏராளமான இளைஞர்களின் டிபி ஆக இவருடைய புகைப்படம் இடம் பெறும்.

இயக்குநர் சரவண சுப்பையா கிறிஸ்துவ மத நம்பிக்கை கொண்ட கதாபாத்திரத்தில் முற்றாக பொருந்தியிருக்கிறார். அவர் பேசும் மலையாளம் கலந்த தமிழ், கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறது.

படத்தின் கதாபாத்திரங்கள் தமிழ், மலையாளம், சிங்களம், சிலாகி தீவின் மொழி, ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிகள் பேசுவதால் பாமர ரசிகர்களுக்கு தமிழ் படம் தான் பார்க்கிறோமா..! என்ற எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியவில்லை.

பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு இவை அனைத்தும் இயக்குநருக்கு தோள் கொடுத்து, படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு நாயகன் கதிரவனும், இயக்குநர் சரவண சுப்பையாவும் இணைந்து, குறைவான பட்ஜெட்டில் நிறைவான படைப்பை வழங்கியிருக்கிறார்கள். இதனால் ‘மீண்டும்’ படத்தை ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/202109151444108545_Tamil_News_Tamil-cinema-Meendum-movie-preview_SECVPF.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/202109151444108545_Tamil_News_Tamil-cinema-Meendum-movie-preview_SECVPF-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்நடிகர் கதிரவன் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மீண்டும்' திரைப்படத்தை, சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்குநரும், நடிகருமான சரவண சுப்பையா இயக்கியிருக்கிறார். வருடத்தின் இறுதி நாளன்று வெளியாகும் 'மீண்டும்' திரைப்படம், ரசிகர்களை பார்க்க தூண்டுமா..! என்பதை இனி காண்போம். கதையின்படி நாயகன் கதிரவன் காவல்துறையில் ரகசிய உளவாளியாக பணியாற்றுகிறார். இவரும் நாயகி அனகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார்கள். மனைவி கருத்தரித்திருக்கும் தருணத்தில், உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய காதலனும்,...