விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி தற்போது தர்மசங்கடத்தில் இருக்கிறார். ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய ரவி, இரு தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமான நிலையில், சில ஊடகங்களில் ‘காலமான ரவி, ஷாஜகான், ஆச்சார்யா படங்களை இயக்கியவர்’ என்று செய்தி வர, தற்போது நான் அவரில்லை என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார், ‘ஷாஜகான்’ ரவி.
இதற்காக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘நான் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி. நண்பர் ஆச்சார்யா படத்தை இயக்கிய ரவியின் எதிர்பாராத மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

பெயர்க் குழப்பம் என்ற சாதாரணமாக சொல்லி தட்டிக் கழித்து விட முடியாது தான். இதனால் ஷாஜகான் ரவியின் குடும்பத்தினர் என்ன மாதிரியான சூழலை கடந்து வந்திருப்பார்கள் என்பதையும ்செய்தியாளர்கள் ஒருகணம் யோசிக்க வேண்டும்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/40d0fffb-a9d8-4fe0-b0d6-56e374f82116-1000x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/40d0fffb-a9d8-4fe0-b0d6-56e374f82116-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி தற்போது தர்மசங்கடத்தில் இருக்கிறார். ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய ரவி, இரு தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமான நிலையில், சில ஊடகங்களில் ‘காலமான ரவி, ஷாஜகான், ஆச்சார்யா படங்களை இயக்கியவர்’ என்று செய்தி வர, தற்போது நான் அவரில்லை என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார், ‘ஷாஜகான்’ ரவி. இதற்காக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘நான் விஜய் நடித்த ஷாஜகான்...