சினி நிகழ்வுகள்

சாந்தனு, மஹிமா நடிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குண்டுமல்லி’

எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் பேனரில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘குண்டுமல்லி’ என்கிற உற்சாகமான காதல் பாடலை இன்று தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது

இந்த வீடியோ பாடலின் டீசர் டிசம்பர் 25-ஆம் தேதி இரண்டு மொழிகளிலும் வெளியானது. திருமண நிச்சயதார்த்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட காதல் மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த பாடலாக இது உருவாகியுள்ளது. பாடல் வரிகள் வசீகரமாகவும், காட்சிகள் வண்ணமயமாகவும், இசை இனிமையாகவும் உள்ளன.

சாந்தனு தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். மஹிமா நம்பியார் தனது முகபாவங்களால் மனங்களை கொள்ளை கொள்கிறார்.

இந்தப் பாடலுக்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்து, நித்யஸ்ரீயுடன் இணைந்து தமிழ் பதிப்பை பாடியுள்ளார்.

திமுகவின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார கீதமான ‘ஸ்டாலின் தான் வாராரு’ பாடலுக்கு இசையமைத்தது ஜெரார்ட் ஃபெலிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

கே எஸ் ஹரிஷங்கர் மற்றும் நித்யஸ்ரீ குண்டுமல்லி பாடலின் மலையாள பதிப்பை பாடியுள்ளனர். குண்டுமல்லி பாடலுக்கான தமிழ் வரிகளை விவேக் ரவியும், மலையாள வரிகளை ரஃபீக்கும் எழுதியுள்ளனர். திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியின் உணர்வுகளை பாடல் வரிகள் அழகாக வெளிப்படுத்தியுள்ளன.

ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொள்ள, படத்தொகுப்பை கார்த்திக் மனோரமா கவனிக்க, கலை இயக்கத்தை தினேஷ் செய்துள்ளார். காயத்ரி ரகுராம் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

காண்பவர்களை உடனடியாக கவரும் வகையிலும், அவர்களது இதயங்களில் இடம் பிடிக்கும் வகையிலும் குண்டுமல்லி பாடல் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *