வரும் 2022 புத்தாண்டின் முதல் வாரம், முதல்வெளியீடாக வரவிருக்கிறது ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் நடிப்பில் உருவான அன்பறிவு திரைப்படம் ஜனவரி 7 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி, இப்படத்தில் தனது இசையமைப்பில் திரைத்துறையின் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களான யுவன் சங்கர்ராஜா- சந்தோஷ் நாராயணன் ஆகியோரை பாட வைத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா பாடிய‘அரக்கியே’ பாடல் இசைப் பிரியர்களை மெய்சிலிர்க்க வைத்த அதேவேளையில், சந்தோஷ் நாராயணன் பாடிய ‘ரெடி ஸ்டெடி போ’ என்ற ஆல்பத்தின் புதிய சிங்கிள் ரசிகர்களின் கொண்டாட்டமாகி இருக்கிறது. தனது இசையில் இருபெரும் இசையமைப்பாளர்களை பாடவைத்த மகிழ்ச்சியில் ஆதி இன்னமும் பரவச நிலையில்.

படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி முதன்மை வேடத்தில் நடிக்க, ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகள். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் கையாள, பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), எஸ்எஸ் மூர்த்தி (கலை), பிரதீப் தினேஷ் (ஸ்டன்ட்), பொன் பார்த்திபன் (உரையாடல்), பூர்ணிமா ராமசாமி (ஆடை வடிவமைப்பாளர்), ஷெரீப் (நடன இயக்குனர்) ஆகியோரின் பங்களிப்பும் படத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கின்றன.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/c1f56e66-3501-406b-b8ee-ca98fc6ae6cc-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/c1f56e66-3501-406b-b8ee-ca98fc6ae6cc-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்வரும் 2022 புத்தாண்டின் முதல் வாரம், முதல்வெளியீடாக வரவிருக்கிறது ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் நடிப்பில் உருவான அன்பறிவு திரைப்படம் ஜனவரி 7 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி, இப்படத்தில் தனது இசையமைப்பில் திரைத்துறையின் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களான யுவன் சங்கர்ராஜா- சந்தோஷ் நாராயணன் ஆகியோரை பாட வைத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா பாடிய‘அரக்கியே’ பாடல் இசைப் பிரியர்களை மெய்சிலிர்க்க வைத்த...