திரை விமர்சனம்

பிளட் மணி பட விமர்சனம்

குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற கிஷோர் மற்றும் அவரது தம்பி ஆகியோருக்கு அந்த ஊர் நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. ஊடகத்துறையில் வேலை பார்க்கும் பிரியா பவானி சங்கர், கிஷோர் கேசை கையிலெடுக்கிறார். ‘இன்னும் முப்பது மணி நேரத்தில் தூக்கு’ என்று அறிவிக்கப்படும் சூழலில், அந்த தூக்கு தண்டனையிலிருந்து அவர்களை பிரியா பவானி சங்கர் காப்பாற்றினாரா என்பது ‘திக் திக்’ கிளைமாக்ஸ்.

அரபு நாடுகளில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனைக்குள்ளானவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக பணம் (பிளட் மணி) கொடுத்தால் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி பணம் கொடுத்தும் கிஷோர் மற்றும் அவரது தம்பிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அது ஏன் என்பது திரைக்கதை ட்விஸ்ட்.

கதையின் நாயகியாக பிரியா பவானி சங்கர். அலட்டல் இல்லாத அளவான நடிப்பு இவரது பிளஸ். அப்பாவி கிராமத்து தந்தையாக வரும் கிஷோர், நாயகனாக வரும் மெட்ரோ சிரிஷ், சுப்பு பஞ்சு, கிஷோரின் குடும்பத்தார் என அனைவரும் கேரக்டர்களாவே படம் முழுக்க உலா வருகிறார்கள். எடுத்துக் கொண்ட கதையை சமரசத்துக்கு இடமின்றி அதேநேரம் எதிர்பார்ப்பு பின்னணியில் தந்து கவனம் ஈர்க்கிறார், இயக்கிய சர்ஜூன். கிளைமாக்ஸ் எதிர்பாராதது.

சதீஷ் ரகுநந்தனின் பின்னணி இசையும் பாலமுருகனின் ஒளிப்பதிவும் ரசிகனை கதை நடக்கும் குவைத்துக்கே தூக்கிப்போய் விடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *