காவல்துறையில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார், இந்த ‘ரைட்டர்’.
காவல்துறைக்கு சங்கம் வேண்டும் என்று சட்டபூர்வமாக முயற்சி மேற்கொள்ளும் ரைட்டர் சமுத்திரக்கனி, அதற்காக வேறு ஊருக்கு தூக்கியடிக்கப்படுகிறார். வந்த இடத்தில் இன்னொரு பிரச்சினை. வெளியூர் இளைஞர் ஒருவரை லாட்ஜில் அடைத்து வைத்து அவர் மீது தீவிரவாத முத்திரை குத்த முயற்சி மேற்கொள்கிறது காவல்துறை மேலிடம்.

இதை லேட்டாக தெரிந்து கொள்ளும் சமுத்திரக்கனி அந்த இளைஞரை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ள…அது நடந்ததா… இளைஞர் மீது காவல்துறை மேலிடம் கொண்ட ஆத்திரத்துக்கு என்ன காரணம் என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை.காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, மனசாட்சி போலீசாக வாழ்ந்திருக்கிறார். லாட்ஜில் போலீசால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞன் மீது இறுகும் போலீஸ் வலை தெரிய வந்ததும் அதிர்ந்து போகிறாரே, அந்த ஒரு இடம் போதும். உயர் அதிகாரிகளிடம் அடிபட்டு அவமானப்படும் காட்சிகளிலும் சரி, காவல்துறைக்காக சங்கம் கேட்டு போராடும் காட்சிகளிலும் புதிய சமுத்திரக்கனியை காண முடிகிறது.
அதிகாரம் மிக்க காவல்துறை அதிகாரியிடம் சிக்கி தவிக்கும் கல்லூரி மாணவர் வேடத்தில் நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணனின் கதறல் இன்னமும் காதுக்குள்.
ஹரியின் கிராமத்து அண்ணன் வேடத்தில் இயக்குநர் சுப்பிரமணிய சிவா, ‘வாவ்.’ தம்பி மீதான பாசத்தை கொட்டும் இடத்திலும் ஜெயிலில் தம்பியை பார்த்து கதறும் இடத்திலும் அந்த பாச கிராமத்து அண்ணனை அப்படியே நம் நெஞ்சுக்குள் இடம் பெயர்த்து விடுகிறார். ஜெயிலில் சமுத்திரக்கனியை இவர் சந்திக்கும்் அந்த கிளைமாக்ஸ், ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு’ நடிப்பு.
கதையின் திருப்புமுனை கேரக்டரில் வரும் இனியா, உயர் அதிகாரி முன்பு குதிரை சவாரி செய்யும் காட்சிக்கு அரங்கு அதிர கரகோஷம்.

‘மேற்கு தொடர்ச்சி மலை’ புகழ் ஆண்டனியின் கதாபாத்திரம் புதுசு மாதிரியே அவர் நடிப்பும் புதுசு. மனிதர் சிரிக்காமல் நம்மை சிரிக்க வைக்கிறார். வில்ல முகம் காட்டும் உயர்போலீஸ் அதிகாரியாக கவின் ஜெய்பாபு. ‘சைலண்ட்’ முகத்தில் இத்தனை வயலண்ட்டா?

மேலதிகாரி கெடுபிடியில் சிக்கி அவதியுறும் போலீஸ் இன்ஸ்பெக்டராக கவிதா பாரதி, கச்சிதமான தேர்வு. வழக்கறிஞராக ஜி.எம்.சுந்தர் இயல்பு நடிப்பில் ஈர்க்கிறார். காவலர்களுக்கு சங்கம் வேண்டும், என்ற வலியுறுத்தலோடு படத்தை தொடங்கும் இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப், அதிகார வர்க்கத்தினால் ஒரு தலைமுறை எப்படி நசுக்கப்படுகிறது என்பதை நேஞ்சில்ஆணியடிக்கிற விதத்தில் சொல்லியிருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசையும் பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவும் இயக்குனருக்கு அமைந்த வெற்றிக் கூட்டணி.

ரைட்டர், கிரேட்டர்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/547eed22-c6b7-40a3-8137-7050f007ad79-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/12/547eed22-c6b7-40a3-8137-7050f007ad79-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்திரைப்படங்கள்காவல்துறையில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார், இந்த ‘ரைட்டர்’. காவல்துறைக்கு சங்கம் வேண்டும் என்று சட்டபூர்வமாக முயற்சி மேற்கொள்ளும் ரைட்டர் சமுத்திரக்கனி, அதற்காக வேறு ஊருக்கு தூக்கியடிக்கப்படுகிறார். வந்த இடத்தில் இன்னொரு பிரச்சினை. வெளியூர் இளைஞர் ஒருவரை லாட்ஜில் அடைத்து வைத்து அவர் மீது தீவிரவாத முத்திரை குத்த முயற்சி மேற்கொள்கிறது காவல்துறை மேலிடம். இதை லேட்டாக தெரிந்து கொள்ளும் சமுத்திரக்கனி அந்த இளைஞரை காப்பாற்ற முயற்சி...