சினி நிகழ்வுகள்

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் V தியாகராஜன், இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராக, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில் V தியாகராஜன் அவர்கள் ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். திரைப்படத் தயாரிப்பில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தி வரும், திரு செந்தில் தியாகராஜன் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். திரைப்படத் துறையில் சிறந்த அலுவலகப் பொறுப்பாளராக இருப்பதால், சனிக்கிழமை (டிசம்பர் 18, 2021) ஒரிசாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற தேர்தலின் போது உறுப்பினர்களால் இவர் நியமிக்கப்பட்டார். தலைவராக நடிகர் ராகுல் போஸும் (விஸ்வரூபம் புகழ்) ஒருமனதாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் அலுவலகப் பொறுப்பாளர்களாக சிறந்த பணிகளை ஆற்றி வரும் இவர், ஆசிய அளவில் 5வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணியை கொண்டு, 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வது மற்றும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கான தரம் வரிசையில் இடம்பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படவுள்ளனர்.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளராக திரு.செந்தில் தியாகராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் டிராக் & ஃபீல்ட், ரக்பி மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றில் புகழ்பெற்ற தேசிய தடகள வீரர் ஆவார். தவிர, அவர் சர்வதேச ரக்பி விளையாட்டுகளில் போட்டியிட்டார் மற்றும் அமெரிக்க முன்னாள் ஒலிம்பிக் தலைமை பயிற்சியாளர் சார்லி கிரெய்க்கின் தலைமையின் கீழ் கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டிக்காக ஸ்காலர்ஷிப்பில் பல்கலைக்கழகத்திற்காக ரக்பி விளையாட்டு போட்டிகளில் போட்டியிட்டார். தமிழ்நாடு ரக்பியின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் மூத்த துணைத் தலைவராகவும் உள்ளார். இவர் California State University மற்றும் Fletcher School of Law and Diplomacy from Tufts University ஆகியவற்றில் மேலாண்மை தகவல் அமைப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தகம் மற்றும் உறவுகளில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் என்பது குற்றிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *