சினிமா செய்திகள்

‘‘படம் வெற்றி பெற்றபிறகே நிம்மதியாக தூங்குகிறேன்…’’ ‘பேச்சிலர்’ பட வெற்றி விழாவில் நாயகி திவ்யபாரதி பரவசம்

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு வழங்க, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான பேச்சிலர் திரைப்படம், ரசிகர்களின் எகோபித்த ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
விழாவில் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு தயாரிப்பு தரப்பில் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
விழாவில் ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி..டில்லிபாபு பேசியதாவது…
‘‘இந்தப்படத்தை வெற்றிப்படமாக மாற்றியவர்களுக்கு நன்றி சொல்ல மட்டுமே இவ்விழா. இயக்குநர் தொடங்கி இதில் உழைத்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி. அவர்களால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. பத்திரிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி. இப்படத்தை தமிழகமெங்கும் வெற்றிப்படமாக மாற்றிய சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலனுக்கும் நன்றி. சஞ்சய் வர்தா சாருக்கும் நன்றி. எங்கள் நாயகன் ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி. படமெடுக்கும் போதும், எடுத்த பிறகும் மிகுந்த ஆதரவாக இருந்தார். அவரது வெற்றிப்பயணம் தொடர வேண்டும்.’’ முனீஷ்காந்த் பேசியதாவது…
என்னுடன் நடித்த கலைஞர்கள் எல்லோருக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இயக்குநர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் படத்தில் எப்படி வேண்டுமானாலும் நடியுங்கள் கேமராவால் நாங்கள் ஃபாலோ செய்கிறோம் என்றார். இந்தப்படத்திற்கு தான் அதிக நாள் டப்பிங் செய்துள்ளேன். இந்தபடம் புது அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…
‘‘உழைப்பை அங்கீகாரம் செய்வது, அனைவராலும் முடியாது, நல்லா உழைப்பவர்களால் மட்டுமே தான் அது முடியும். ஒரு தயாரிப்பாளராக அனைவரையும் இங்கு கூட்டி, எல்லோரையும் பாராட்டுகிறார். மிகச்சிறந்த தயாரிப்பாளர் டில்லிபாபு. அவர் ஒரு படைப்பு பிடித்தால்பை எமோஷனலாக கனக்ட் ஆகி செய்வார். அவர் மாதிரியான தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை. பேச்சிலர், ராக்கி இரண்டையும் ரிலீஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது, தமிழின் சிறந்த படங்களை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக நினைக்கிறேன். தம்பி சதீஷ் ஒரு மிகச்சிறந்த கலைஞன். கதை சொல்லலே மிக வித்தியாசமாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் சாரின் மூணு முக்கியமான வெற்றிப்படங்களில் நான் இருந்துள்ளேன் என்பது எனக்கு பெருமை. ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டால் வெறி கொண்டு உழைப்பவர் அவர். இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடன் பயணித்தது மகிழ்ச்சி. பத்திரிக்கை நண்பர்கள் தந்த ஊக்கங்களுக்கு நன்றி. எல்லோருக்கும் மிக்க நன்றி’’

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசியதாவது…
‘‘இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதற்கு காரணம் டில்லி சார் மற்றும் சக்தி சாரும் தான் காரணம். ஒரு படத்திற்கு இது தான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது அவர்கள் தான். இந்தப் படம் எனக்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு பிறகு பெரிய வெற்றி பெற்றுள்ளது. தற்போது 3 வது வாரம் கடந்து அதற்கான ரசிகர்களை சேர்ந்துள்ளது. இப்படத்தை அட்டகாசமாக உருவாக்கிய சதீஷ் மற்றும் நடித்த ஒவ்வொரு நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி.’’

படத்தின் நாயகி திவ்யபாரதி பேசியதாவது…
சுப்பு பாத்திரத்தை எனக்கு தந்ததற்காக சதீஷ்க்கு முதலில் நன்றி. படம் வந்த நாளிலிருந்து வரும் பாராட்டுக்கள் நிம்மதியான தூக்கத்தை தந்துள்ளது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் தந்த விமர்சனங்களுக்கு நன்றி. ஜி.வி. சார் பெரிய இடத்தை தந்து, ஆதரவு தந்ததற்கு நன்றி. சித்து அருமையான இசையை தந்துள்ளார். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி.’’

இயக்குனர் சதீஷ் செல்வகுமார் பேசியதாவது…
‘‘இந்த படத்தின் வெற்றி டில்லி சாருக்கு தான் சென்று சேர வேண்டும், அவர் தான் இப்படத்திற்கு முழுக்காரணம். நான் இந்தப் பயணத்தில் நிறைய பேரை காயப்படுத்தியிருக்கிறேன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெரும் கூட்டத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இரவு பகலாக இப்படத்தில் உழைத்திருக்கிறோம். நிஜத்திற்கு அருகில் டிசைன்ஸ் செய்து தந்த கோபி அண்ணாவுக்கு நன்றி. ஜீவி சார் பச்சிளம் பாடலை அவர் தான் செய்தார். சித்து இந்தப்படத்திற்கு 13 நாள் தூங்காமல் வேலை செய்தார் அவர் இல்லாவிட்டால் இன்னும் ஒரு மாதம் லேட் ஆகியிருக்கும். பக்ஸ் அண்ணா நிஜத்திலும் அண்ணா தான். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. பேச்சிலர் பசங்க அனைவருக்கும் நன்றி. திவ்யாவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு வரும் பாராட்டுக்கள் லோகேஷ்க்கும், ஈஸ்வருக்கும் உரித்தானது. சக்தி அண்ணா எங்கள் மேல் வைத்த நம்பிக்கை பெரிது. அதற்கு நன்றி. ஒரு கதையை எப்படி வேண்டுமானாலும் எழுதி விடலாம், ஆனால் அதை நம்பிய ஜி.வி. சார் மனசு தான் இந்தப்படம் உருவாக காரணம் அதற்காக அவருக்கு நன்றி. இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை செய்வதில் அவர் காட்டிய நுணுக்கம் பிரமிப்பானது. டில்லி சார் இல்லாமல் இந்தப்படம் நடக்க 1 சதவீதம் கூட வாய்ப்பில்லை அவருக்கு பெரிய நன்றி.’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *