பழமையான அரசுக் கல்லூரியில் படிக்க செல்லும் நாயகன் வெற்றிக்கு குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வருவது அதிர்ச்சி தருகிறது. இது எதனால் என்று நாயகன் குழம்பித் தவித்த நேரத்தில் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார் நாயகி ஸ்மிருதி வெங்கட்.
இருவரும் இணைந்து மர்ம மரணங்கள் குறித்து ஆராய, அப்போது, பல அமானுஷ்ய விஷயங்களும், திடுக்கிடும் அசம்பாவிதங்களும் வெளிவருகிறது. மர்ம மரணங்களுக்கான காரணங்களை கண்டுபிடித்தனரா? அமானுஷ்யம் நடக்க காரணம் என்ன? என்பது ‘திக்திக்’ திகில் கதை.
‘8 தோட்டாக்கள், ஜீவி’ படங்களைப் போலவே வெற்றிக்கு இதிலும் அமைதியான கதாபாத்திரம். உடல்மொழியும், வசன உச்சரிப்புமாய் கேரக்டருடன் இணைந்து போகிறார். நாயகி ஸ்மிருதி வெங்கட் வந்த பிறகு படம் இன்னும் வேகம் பிடிக்கிறது.
ஜமீனாக வரும் வேல. ராமமூர்த்தியின் மிரட்டலான நடிப்பும், வனத்திற்குள் வாழும் மக்களின் பரிதாப வாழ்க்கையும் நெஞ்சில் பதிகிறது. வனப்பெண் மல்லியாக அனுசித்தாரா கவர்கிறார். அழகம்பெருமாளின் கேரக்டர் எதிர்பாராத சஸ் பென்சில் விழி விரிய வைக்கிறது.
இருவேறு காலகட்டங்களில் கதையை நகர்த்தும் ஸ்ரீகண்டனின் இயக்கத்தில் இடைவேளைக்குப் பிறகு படத்தில் வேகம் அதிகம்.வனத்தை காப்பாற்ற தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் காட்சி மனதை பிசைகிறது.

வனம், பசுமை.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/VM_132922000000.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/VM_132922000000-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்பழமையான அரசுக் கல்லூரியில் படிக்க செல்லும் நாயகன் வெற்றிக்கு குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வருவது அதிர்ச்சி தருகிறது. இது எதனால் என்று நாயகன் குழம்பித் தவித்த நேரத்தில் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார் நாயகி ஸ்மிருதி வெங்கட். இருவரும் இணைந்து மர்ம மரணங்கள் குறித்து ஆராய, அப்போது, பல அமானுஷ்ய விஷயங்களும், திடுக்கிடும் அசம்பாவிதங்களும் வெளிவருகிறது. மர்ம மரணங்களுக்கான காரணங்களை கண்டுபிடித்தனரா?...