ஐ.டி. துறையில் மென்பொறியாளராக வேலை செய்யும் சசிகுமாருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது. அந்த ப்ராஜக்ட் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் கவுரவம் தொடர்புடையது என்பதால், மிகுந்த கவனத்துடன் அவர் போட்டி கம்பெனிகளின் எதிர்ப்பை தாண்டி அதனை கையாள வேண்டியிருக்கிறது.

இதற்கிடையே கிராமத்தில் மிகப்பெரிய குடும்ப பின்னணியை கொண்ட சசிகுமாரின் குடும்பம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறது. ‘ப்ராஜக்டா, திருமணமா?’ என்ற நிலையில், திருமணத்தை தள்ளி வைப்பதே மேல் என்ற முடிவுக்கு வரும் சசிகுமார், குடும்பத்தினரின் திருமண நச்சரிப்பை தள்ளிப்போடும் விதத்தில் உடன்வேலை பார்க்கும் நிக்கி கல்ராணியிடம் தன்னை காதலிப்பது போல் நடிக்க கேட்டுக் கொள்கிறார். அவரும் சம்மதம் சொல்ல, கிராமத்துக்கு நிக்கி கல்ராணியுடன் போகிறார். அங்கே நடிப்பு நிஜமாக எண்ணப்பட்டு, நிக்கி கல்ராணியையே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. திருமணம் நடந்ததா? கம்பெனியின் கவுரவம் காக்கும்நோக்கில் அவர் பொறுப்பேற்ற புராஜக்ட் என்னவானது என்பது மீதிக்கதை.
குடும்பம், காதல், நட்பு என இந்த மூன்று புள்ளியிலும் ஒரு நடிகராக தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார், சசிகுமார்.
நாயகி நிக்கி கல்ராணி மாடு கன்று ஈனும் காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு தேர்ந்த நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.
தம்பி ராமையா, யோகிபாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.
விவசாயம், ஐ.டி. சம்மந்தப்பட்ட கதையை குடும்பம் மற்றும் கமர்ஷியல் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு.கூட்டுக் குடும்பத்தின் சிறப்பை இன்னும்கொஞ்சம் வலுவான காட்சிகள் மூலம் சொல்லியிருக்கலாம்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார். கிராமத்து அழகை ஒளிப்பதிவாளர் சித்தார்த்தின் கேமரா அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது..
ராஜவம்சம், கூட்டுக்குடும்பங்களின் கொண்டாட்டம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/Rajavamsam-Full-Movie-Rajavamsam.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/Rajavamsam-Full-Movie-Rajavamsam-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்ஐ.டி. துறையில் மென்பொறியாளராக வேலை செய்யும் சசிகுமாருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது. அந்த ப்ராஜக்ட் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் கவுரவம் தொடர்புடையது என்பதால், மிகுந்த கவனத்துடன் அவர் போட்டி கம்பெனிகளின் எதிர்ப்பை தாண்டி அதனை கையாள வேண்டியிருக்கிறது. இதற்கிடையே கிராமத்தில் மிகப்பெரிய குடும்ப பின்னணியை கொண்ட சசிகுமாரின் குடும்பம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறது. ‘ப்ராஜக்டா, திருமணமா?’ என்ற நிலையில், திருமணத்தை தள்ளி வைப்பதே மேல் என்ற...