அரியர்ஸை ஒருவழியாக முடித்து விட்டு காதலியை கைபிடிக்கும் நோக்கில் வேலை தேட முயன்று கொண்டிருக்கிறார் சந்தானம். பேசும்போது திக்கும் பிரச்சினை வேலை கிடைக்க தடையாகிறது. ரிட்டயர்டு தமிழ் வாத்தியாரான அப்பா எம்.எஸ்.பாஸ்கரோ ‘வேலை கிடைக்காமல் வீட்டுப் பக்கம் வராதே’ என்கிறார். இந்த சூழலில் விதி சந்தானத்தின் வாழ்வில் நுழைந்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தினால் அதுவே ‘சபாபதி.’

இந்த விதி அரசியல்வாதி ஒருவரின் ரூ. 20 கோடி பணம் அடங்கிய சூட்கேசை சந்தானத்திடம் கொண்டு வந்து சேர்க்க… பணம் சந்தானத்திடம் இருப்பது தெரிய வந்த அந்த அரசியல்வாதி சந்தானத்தின் உயிருக்கு குறி வைக்க…சந்தானம் உயிர் தப்பினாரா? காதல் என்னவாயிற்று என்பதை முடிந்தவரை நகைச்சுவை முலாம் பூசி சொல்லியிருக்கிறார்கள்.

திக்குவாய் பிரச்சினை, கூடவே அப்பாவி என்ற அந்த சபாபதி கேரக்டரில் சந்தனமாய் மணக்கிறார், சந்தானம். ‘நொடிக்கு நொடி காமெடி’ என்ற அவரது இயல்பான களத்தில் இருந்து விலகி இயக்குனரின் நடிகராக மாறி இருப்பது ஆச்சரியம். காதலியின் அம்மாவிடம் திக்குவாய் பிரச்சினைக்காக அவமானப்படுவது, இன்டர்வியூ போன இடத்தில் திக்குவாய் பாணியில் பேசி தன்னை அவமானப்படுத்தும் அந்த இன்டர்வியூ அதிகாரி முன் கலங்கி நிற்பது என நடிப்பில் குணசித்ரம் கொடி கட்டுகிறது. அதுவே அப்பாவிடம் குடித்து விட்டு அலம்பல் செய்யும் இடத்தில் பழைய கலகல சந்தானம்.

நாயகியாக வரும் பிரீத்தி வர்மா அழகாக இருக்கிறார். அழகாக நடனமும் ஆடுகிறார். கிளைமாக்சில் மட்டும் கொஞ்சூண்டு நடிக்கிறார். அம்மாக்கள் உமா பத்மநாபன், ரமா பொறுப்புணர்ந்த நடிப்பில் பிரகாசிக்கிறார்கள்.

சந்தானத்தின் அப்பா தமிழ் வாத்தியார் கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் கலகலப்பின் உச்சம். மகனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிய வந்தது முதல் ‘வாட்ச்’ பண்ணத் தொடங்கும் அடுத்தடுத்த காட்சிகளில் இந்த அப்பா நடிப்பில் அதகளமே பண்ணுகிறார். வில்லன்களாக சாயாஜி ஷிண்டே, வம்சி, ஒரு காட்சியில் வந்தாலும் சாமியார் மயில்சாமி, லொள்ளு சபா சுவாமிநாதன், மாறன் என நடித்தவர்கள் அத்தனை பேரும் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

சாம்.சி.எஸ்.சின் பின்னணி இசை படத்தின் பெரும்பலம். கூடவே ஸ்ரீரங்கத்தை அழகுற காட்டிய பாஸ்கர் ஆறுமுகத்தின் கேமரா பக்க பலம். விதியை காரணம் காட்டி ‘வலிய விளையாட்டை’ பொறுப்பாகவே ஆடியிருக்கிறார், இயக்கிய சீனிவாசராவ்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/sabapathi-775x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/sabapathi-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்அரியர்ஸை ஒருவழியாக முடித்து விட்டு காதலியை கைபிடிக்கும் நோக்கில் வேலை தேட முயன்று கொண்டிருக்கிறார் சந்தானம். பேசும்போது திக்கும் பிரச்சினை வேலை கிடைக்க தடையாகிறது. ரிட்டயர்டு தமிழ் வாத்தியாரான அப்பா எம்.எஸ்.பாஸ்கரோ ‘வேலை கிடைக்காமல் வீட்டுப் பக்கம் வராதே’ என்கிறார். இந்த சூழலில் விதி சந்தானத்தின் வாழ்வில் நுழைந்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தினால் அதுவே ‘சபாபதி.’ இந்த விதி அரசியல்வாதி ஒருவரின் ரூ. 20 கோடி பணம் அடங்கிய சூட்கேசை...