சினிமா செய்திகள்

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ இந்தி டிரெய்லரும் வந்தாச்சு

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ இந்தி டிரெய்லரும் வந்தாச்சு
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியான இந்த ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்டானது. வழக்கறிஞர் சந்துருவாக, ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் சூர்யா ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். இப்போது இந்தி ரசிகர்களை மகிழ்விக்க, படத்தின் இந்தி ட்ரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2-ம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் வெளியாகிறது.
படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து தங்கள் 2டி என்டர்டெய்ன்மென்ட் பேனரில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இணை தயாரிப்பு ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.
படத்தின் முக்கிய கேரக்டர்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ரெஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ இம் பிடித்திருக்கிறார்கள். சீன் ரால்டன் இசையமைக்க, கேமராவை கையாண்டு இருப்பவர் எஸ்.ஆர்.கதிர்.
ஜெய் பீம்’ இந்தி ட்ரெய்லருக்கான லிங்க்: http://youtu.be/nnXpbTFrqXA