சென்னையில் சவுண்ட் இன்ஜினியராக இருக்கும் ராய் லட்சுமி, பறவைகளின் சத்தத்தை பதிவு செய்ய நண்பர்களுடன் கொடைக்கானல் பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டு பங்களா ஒன்றில் தங்குகிறார். அந்த பங்களாவில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணரும் அதே சமயம் அந்த ஊரில் இரண்டு மர்மக் கொலைகள் நடக்கிறது. இதற்கு காரணம் ராய் லட்சுமி தான் என்று காவலதுறை அவரை கைது செய்கிறது.

அந்தக் கொலைகளை செய்தது யார்? அந்த பங்களாவில் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? என்பதே படத்தின் அடுத்த கட்ட திகில் காட்சிகள். மீதி கதை.

மாடர்ன் பெண்ணாகவும், வெகுளித்தனமான பெண்ணாகவும் நடித்து நடிப்பில் கவர்ந்திருக்கிறார், ராய்லட்சுமி.
மற்றொரு நாயகியாக வரும் சாக்ஷி அகர்வால் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். காதல், வெறுப்பு, கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
ஆவிக்கதையில் கொஞ்சம் வித்தியாசம் காட்டி இயக்கியிருக்கிறார், வினோ வெங்கடேஷ். திகிலும் பரபரப்புமாய் முதல் பாதியை தந்தவர், மறுபாதியிலும் அதே வேகம் காட்டியிருந்தால் கொண்டாட்டம் கூடுதலாகி இருக்கும். காமெடி கேரக்டரில் வரும் ரோபோ சங்கர் ‘கடி’க்கிறாரே தவிர சிரிப்பு வரவில்லை.
அஸ்வமித்ராவின் இசை படத்திற்கு பலம். ரம்மியின் ஒளிப்பதிவு, கொடைக்கானலை இ்ன்னும் அழகாக்குகிறது.
ஆவிக்கதைக்குள் வித்தியாசமான கதைக்கருவை கையாண்டதற்காக இயக்குனரை பாராட்டலாம்.