????????

நாயகன் மகேஷின் தந்தை உள்ளிட்ட மூன்று பேர் மணல் திருடும் லாரி மோதி இறந்து விடுகிறார்கள். இதனால், மணல் திருட்டை நிறுத்தும் நடவடிக்கையில் நாயகன் ஈடுபட, அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், அவற்றை நாயகன் எப்படி எதிர்கொண்டான் என்பதே இந்த அதிரடி ‘வீராபுரம்’.

‘அங்காடித்தெரு’ படத்திற்கு பிறகு நடிகர் மகேஷூக்கு அமைந்த நல்ல வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். வேகமும், வீரமும் நிறைந்த கிராமத்து இளைஞராக கண்முன் நிறைகிறார், மகேஷ்.

நாயகியாக நடித்திருக்கும் மேக்னா, நடிப்பிலும் அழகு.

ரித்தேஷ் மற்றும் ஸ்ரீதர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசனை. பி.எஸ்.பிரேம்குமாரின் ஒளிப்பதிவில் க்ளைமாக்ஸ் சேசிங் காட்சி மிரட்டல்.

எழுதி இயக்கியிருக்கும் பி.எஸ்.செந்தில்குமார், முதல் படத்திலேயே சமூக பிரச்சினையை கையில் எடுத்ததோடு மெசேஜூம் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் வரவேற்கப்பட வேண்டிய வீராபுரம் இது. கொண்டாடலாம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/09/Veerapuram-220-movie-poster-1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/09/Veerapuram-220-movie-poster-1-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்நாயகன் மகேஷின் தந்தை உள்ளிட்ட மூன்று பேர் மணல் திருடும் லாரி மோதி இறந்து விடுகிறார்கள். இதனால், மணல் திருட்டை நிறுத்தும் நடவடிக்கையில் நாயகன் ஈடுபட, அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், அவற்றை நாயகன் எப்படி எதிர்கொண்டான் என்பதே இந்த அதிரடி ‘வீராபுரம்’. ‘அங்காடித்தெரு’ படத்திற்கு பிறகு நடிகர் மகேஷூக்கு அமைந்த நல்ல வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். வேகமும், வீரமும் நிறைந்த கிராமத்து இளைஞராக கண்முன் நிறைகிறார், மகேஷ். நாயகியாக...