ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் இதுவரை சொல்லப்படாத புதிய களம் இந்த ‘ஆறாம் நிலம்.’

2009-ம் ஆண்டு தமிழ் ஈழப்போர் முடிவுக்கு வந்த போது, பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தனர். அப்படி சரணடைந்தவர்கள் வீடு திரும்பவில்லை. அதேநேரம் அப்படி சரணடைந்தவர்களை காணாமல் போனவர்கள் என்று அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது, சிங்கள அரசு. இப்படி சரணடைந்து காணாமல் போனவர்களை இழந்த அவர்களது குடும்பங்களின் தவிப்பையும், அவர்களின் அன்றாட வாழ்க்கையின் துயரங்களையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியே படம்.

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் தேடிக்கொண்டே இருக்கும் அவரது மனைவி, அப்பா எப்போது வருவார்? என்ற கேள்வியுடனும், ஏக்கத்துடனும் காத்துக் கொண்டிருக்கும் மகள். இந்த இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழ் ஈழ மக்களின் இதய வலிகளை நமக்கும் கடத்தியிருப்பதில் இயக்குநர் அனந்த ரமணன் தனித்து தெரிகிறார்.
போரில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் துயரம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் போருக்குப் பிறகும் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகளின் கண்காணிப்பில் மக்கள் இன்னமும் அடிமையாகத் தான் இருக்கிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தியிருப்பதில் தீர்வே இல்லாத வரலாறும் இணைந்து நெஞ்சுக்குள் ஆணியடிக்கிறது.
கதையின் நாயகியாக நவயுகா, அவரது மகளாக தமிழரசி இருவரும் நடிப்பைத் தாண்டி நம் கண் முன் வாழ்கிறார்கள். முன்னாள் போராளியாக, கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாக வரும் பாஸ்கி உள்ளிட்ட சக பாத்திரங்களும் பளபளப்பு.
சிந்தக்கா ஜெயக்கொடியின் பின்னணி இசையும், சிவசாந்தகுமாரின் ஒளிப்பதிவும் இயக்குனர் அனந்த ரமணன் எடுத்துக் கொண்ட கதைக்கள வலியின் வலிமையை நெஞ்சு வரை கடத்துகிறது.

போரை காட்டாமலே போரின் விபரீதம் உணர வைத்த இந்த ஆறாம் நிலம், நெஞ்சுக்குள்ஆறாத ரணம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/09/six.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/09/six-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் இதுவரை சொல்லப்படாத புதிய களம் இந்த ‘ஆறாம் நிலம்.’ 2009-ம் ஆண்டு தமிழ் ஈழப்போர் முடிவுக்கு வந்த போது, பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தனர். அப்படி சரணடைந்தவர்கள் வீடு திரும்பவில்லை. அதேநேரம் அப்படி சரணடைந்தவர்களை காணாமல் போனவர்கள் என்று அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது, சிங்கள அரசு. இப்படி சரணடைந்து காணாமல் போனவர்களை இழந்த அவர்களது குடும்பங்களின் தவிப்பையும், அவர்களின் அன்றாட வாழ்க்கையின் துயரங்களையும் சர்வதேச...