ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சரித்திர சாதனை படைத்த இசை ஞானி இளையராஜா அவர்கள், புதிதாக அமைக்கப்பட்ட ரெக்கார்டிங் ஸ்டுடியோவில், இசைஞானி அவர்களுக்கு வாழ்த்துமடல் வழங்கி, முக்கனிகளான மா பலா வாழை கன்றுகளை வழங்கினோம். எமது சங்க தலைவர் கவிதா அவர்கள் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்ற தொடர் முயற்சியால், இன்று இசைஞானி அவர்கள் சந்திக்க நேரம் ஒதுக்கினார். புதிய ஸ்டுடியோவை பார்த்து மகிழ்ந்தோம். ஒவ்வொருவருடனும் இசைஞானி இளையராஜா அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு இசையோடு உபசரித்து அனுப்பியது கூடுதல் மகிழ்ச்சி… நன்றி இசைஞானியே…மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு மற்றும் மேலாளர் ஸ்ரீராம் ஆகியோருக்கு சிறப்பு நன்றி.

இப்படிக்கு,
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்(TMJA).