வண்ணத்துப் பூச்சியாய்த் திரியும் இளம்பெண்களை, தங்களது காமப் பசிக்கு இரையாக்கும் படுபாவிகள்; அவர்களைக் கண்டுபிடித்து கதை முடிக்கும் கதாநாயகன். இதுதான் ‘பாப்பிலோன்’ படத்தின் கதைச்சுருக்கம்.

‘பாப்பிலோன்’ என்றால்‘வண்ணத்துப் பூச்சி’ என்று அர்த்தமாம்.

இளைஞர்கள் சிலர் இளம்பெண்களை தங்கள் வலையில் விழவைத்து கூட்டாகச் சேர்ந்து காமப்பசியைத் தீர்த்துக் கொள்வதோடு ‘அந்த’ சம்பவங்களை வீடியோ எடுத்து உற்சாகமாகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதும் தொடர்கிறது. அவர்களிடம் கதாநாயகனின் தங்கை சிக்குகிறார். அதன்பின் கதை எப்படி போகும் என்பதை சொல்லத் தேவையில்லை.

சமூக விழிப்புணர்வை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படத்தை மக்கள் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற அக்கறையுடன் தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்கிறார் ஜெனிஷ்!

பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுபடுத்தும் விதத்தில் நகரும் கதையை எழுதி இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கிறார் ஆறு ராஜா. தங்கையை நாசப்படுத்தி உயிருக்குப் போராடவிட்ட கேவலப் பிறவிகள் மீது ஆத்திரம் கொள்வதும் சாதுர்யமாகத் திட்டமிட்டு தீர்த்துக் கட்டுவதுமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். காதலியுடனான ரொமான்ஸ் காட்சிகளில் வெளிப்படும் கூச்சமும் ரசிக்க வைக்கிறது.

நாயகன் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் பணியாற்றியவர். சூப்பர் ஸ்டாரின்‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தானாம்.

நாயகனின் தங்கையாக வருகிற சௌமியா, சதிவலையில் சிக்கி மனமுடைகிற காட்சிகளில் பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார்.

ஸ்வேதா ஜோயல்

அழகும் இளமையும் இணைந்த கலவையாக ஸ்வேதா ஜோயல். நாயகனின் காதலியாக துடிப்பாக நடிப்பவரின் கண்களில் இருக்கிறது வசீகரம்!

காமவெறியர்களாக நடிப்பதற்காக தேர்ந்தெடுத்திருக்கிற நடிகர்களும் அவர்களின் நடிப்பும் கதைக்குப் பொருத்தம்!

‘பூ’ ராம் முக்கிய வேடத்தில் வருகிறார். கிளைமாக்ஸில் அவரது ஆவேசம் எதிர்பாராதது. ரேகா சுரேஷ், கல்லூரி வினோத் என இன்னபிற நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பும் பலமாக இருக்கிறது.

ஷ்யாம் மோகன் இசையில் பாடல்கள் இதம் தர, பின்னணி இசை அதிர்ச்சிக் காட்சிகளுக்கு அசுரபலம் தருகிறது.

அருள்செல்வன் ஒளிப்பதிவுக்கும், சுதர்சனின் எடிட்டிங் பணிக்கும் தனி பாராட்டு!

நிறைவாக ஒரு வார்த்தை… பாப்பிலோன் இளம்பெண்கள் தங்களிடம் காதல் வார்த்தைகள் பேசுகிற இளைஞர்களிடம் உஷாராக இருப்பதற்கு தூண்டும்!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/பாப்பிலோன்1.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/பாப்பிலோன்1-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்வண்ணத்துப் பூச்சியாய்த் திரியும் இளம்பெண்களை, தங்களது காமப் பசிக்கு இரையாக்கும் படுபாவிகள்; அவர்களைக் கண்டுபிடித்து கதை முடிக்கும் கதாநாயகன். இதுதான் ‘பாப்பிலோன்’ படத்தின் கதைச்சுருக்கம். ‘பாப்பிலோன்’ என்றால்‘வண்ணத்துப் பூச்சி’ என்று அர்த்தமாம். இளைஞர்கள் சிலர் இளம்பெண்களை தங்கள் வலையில் விழவைத்து கூட்டாகச் சேர்ந்து காமப்பசியைத் தீர்த்துக் கொள்வதோடு 'அந்த' சம்பவங்களை வீடியோ எடுத்து உற்சாகமாகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதும் தொடர்கிறது. அவர்களிடம் கதாநாயகனின் தங்கை சிக்குகிறார். அதன்பின் கதை...