சினி நிகழ்வுகள்

‘தீனி’ சினிமா விமர்சனம்

ருசிக்கிற உணவும் இனிக்கிற உணர்வும் பின்னிப் பிணைந்த ‘தீனி.’

பிரபல இயக்குநர் ஐ.வி.சசியின் மகன் அனி ஐ.வி.சசி இயக்கிய தெலுங்குப் படம் ‘நின்னிலா நின்னிலா.’ அதன் தமிழ் டப்பிங் வெர்சன்!

வித்தியாசமான தசைப்பிடிப்பால் அவதிப்படுகிற அசோக் செல்வன் தூக்கமின்மையாலும் சிரமப்படுகிறார். உடற்பருஅன் வேறு விதவிதமாக சமைப்பதில் தேர்சசி பெற்ற அவர் உயர்தர உணவகம் ஒன்றில் இணைகிறார். அங்கு பணிபுரிகிற ரித்து வர்மாவுடன் நெருங்கிப் பழகுகிறார். ரித்துவுக்கு அசோக் செல்வன் மீது மெல்லிய காதல் அரும்ப, அதற்குத் தடையாக வருகிறார் நித்யா மேனன். அந்த நித்யா மேனன் அசோக் செல்வனின் பால்ய வயதிலிருந்து ஒன்றாக கலந்து பழகி காதலர்களாக மாறியவர்கள் என்பதும், அந்த நித்யா உயிருடன் இல்லை என்பதும், அவருக்கு என்ன நடந்தது என்பதும், அசோக் செல்வன் – ரித்து வர்மா இணைகிறார்களா இல்லையா என்பதும், அசோக் செல்வன் உடற்பிரச்னைகளில் இருந்து மீண்டாரா இல்லையா என்பதும் கதையின் போக்கு…

குண்டுத் தோற்றம் இளமைத் தோற்றம் என இரு வேறு ஆசாமியாக அசோக் செல்வன். அமைதியான நடிப்பு கவர்கிறது.

காதலாய் கசிந்துருகும் காட்சிகளில் மனம் நிறைக்கிறார் ரித்து வர்மா.

உணவகத்தின் தலைமை செஃப்பாக நாசரின் நடிப்பு தனியாகத் தெரிகிறது.

நித்யா மேனன் எனர்ஜியாக வருகிறார்; சிரிப்பினால் அந்த எனர்ஜியை நமக்கும் கடத்துகிறார்.

மலையாள ‘பிரேமம்’படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையில் ‘நான் கேட்டேன்…’, உயிர் சுழலுதே…’ பாடல்கள் உருக வைக்கின்றன.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் குளிரில் குளிக்கிற உணர்வைத் தர திவாகர் மணியின் ஒளிப்பதிவு குளிர்ச்சியைக் கூடுதலாக்குகிறது.

திரும்பிய பக்கமெல்லாம் சென்டிமென்ட், அழகான காதல், அளவான வசனங்கள், மெல்ல மெல்ல நகரும் காட்சிகள் இவற்றிலெல்லாம் மனதைப் பறிகொடுக்க விரும்பும் ஆசாமியாக இருந்தால் உங்களுக்கு காத்திருக்கிறது செம ‘தீனி.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *