அதையொட்டி நம்ம கட்டிங் கண்ணையா சேகரிச்சு அனுப்பிய சேதியிதோ:

ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட ஏ.வி.எம். திரைப்பட நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த சரவணன் பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் பலருகு படிப்பினையாக வாழ்ந்துக் காட்டுகிரார்

இவர் இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஒரு முறை அவரிடம் அன்றாட வாழ்க்கைக் குறிச்சுக் கேட்ட போது, ”விடிந்தும் விடியாத பனி மூடிய அதிகாலைப் பொழுதில் எழுவது என் வழக்கம். அதாவது 3.30 மணிக்கு… சீக்கிரமே எழுவது சிரமமானதுதான்; ஆனால், ஒரு வாரம் போராடி அப்படி எழுந்து பாருங்கள்… அதன் பிறகு நீங்களே தூங்க நினைத் தாலும் அதிகாலை உங்களை எழுப்பிவிடும். விழித்தெழுந்ததும், நான் செய்யும் முதல் வேலை… என்னிடம் தங்கள் குறைகளையும், வேதனைகளையும் பகிர்ந்துகொள்பவர்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்காக ஒரு நிமிடம் கண்மூடி கடவுளைத் தியானிப்பதுதான். காலைக் கடன்களை முடித்துவிட்டு, காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, தெலுங்கு சேனல் ஒன்றில் மூழ்கிவிடு வேன். அதில், தினந்தோறும் அற்புதமாய் ஒளிரும் ஸ்ரீஷீர்டியின் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் அன்றைய நாள் முழுவதும் என்னை மலர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகின்றன. மனத்தை ஒருநிலைப் படுத்தும் இந்த நிகழ்ச்சி தியானத்துக்கு நிகரான உணர்வை ஏற்படுத்தும். இறைவனிடம் நான் வேண்டுவது, உட னடியாக நடந்துவிடுவதை எண்ணி பலமுறை பிரமித்திருக்கிறேன். நமக்காக வேண்டுவதைக் காட்டிலும் பிறருக்காக பிரார்த்தனை செய்யும்போது, ஆத்ம திருப்தியை நிச்சயம் உணரமுடியும். அதற்கான பலனையும் ஆண்டவன் அருளுவான்!” – அப்ப்டீன்னு அடிச்சு சொன்னார் ஏவி.எம்.சரவணன்.

மேலும் ”உண்ணும் உணவில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவன் நான். ‘ஏற்ற மிகு வாழ்க்கைக்கு நாக்கே பிரதானம்’ என்பார்கள். ஒரு மனிதனை வாழ்க்கை யின் உயரத்துக்குக் கொண்டு செல்ல வும், அதல பாதாளத்துக்குத் தள்ளிவிட வும், ஆரோக்கியமாகவும், நோயாளியாகவும் ஆக்கவும் நாக்கால் முடியும்! மூன்று வேளையும் இட்லி, காய்கறிகள்தான் என் உணவு. ‘ஒரே டேஸ்ட் போர் அடிக்கலையா?’ என்பார்கள் சிலர். நான் எப்போதுமே ருசிக்காக சாப்பிடுவது இல்லை. பசிக்காகத்தான் சாப்பிடுகிறேன். ஆரோக்கியத்துக்காக அளவோடு சாப்பிடுகிறேன். எந்தக் கல்யாணத்திலும் சாப்பிடும் பழக்கமும் எனக்கில்லை.

‘யாகாவாராயினும் நா காக்க’. நாவைக் கட்டுப்படுத்தினால் போதும். நம் வாழ்க்கையையே காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்ற ஆழமான அர்த்தத்தில்தான் சொல்லி இருக்கிறார் வள்ளுவர். உணவில் மட்டுமல்ல, இனிமையாகப் பேசவும் நாக்கை பழக்கப்படுத்திவிட்டால், அதைவிட பேரின்பம் வேறில்லை.

எனக்கு இப்போது 80 வயதாகிறது. இதுவரை எந்த இடத்திலும் எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காதவன் நான். வாயைக் கட்டாவிட்டால் வயிறு கெடு வது போல, நாக்கைக் கட்டாவிட்டால் வாழ்க்கை கெடும் என்பது என் கருத்து. பேசுவதிலும் சரி, உணவு விஷயத்திலும் சரி. நாக்குதான் நமக்கு நண்பன்.

அமெரிக்கா எடுத்த ஒரு சர்வேயில், முன்னணியில் வெற்றிகரமாகத் திகழ்பவர்களில் 70 சதவிகிதத்தினரின் வெற்றிக்கு, அவர்களின் திறமையைப் போலவே பேச்சுவன்மையும் ஒரு காரணமாம்.வார்த்தைகள் வைரமாக இருக்கவேண்டும்! பேசும் சொற்களில் சுகம் இருக்கவேண்டுமே தவிர, சூடு இருக்கக்கூடாது. சூடு இருக்கக்கூடாது என்பதற்காகத் தானோ என்னவோ, ஈரமான இடத்தில் நாக்கை வைத்திருக்கிறான் இறைவன். எனக்குத் தெரிந்து பலபேர் தன் இனிய சொல்லாலும், நா வன்மையாலும் வாழ்க்கையில் வெற்றிச் சிகரத்தைத் தொட்டிருக்கிறார்கள்.” என்றார்

இப்படியான மனநிலையுடன் பொது வெளியில் வெள்ளை & வெள்ளை உடையில் கைக்கட்டிக் காட்சி அளிக்கும் சரவணன் சாருக்கு ஹேப்பி பர்த் டே சொல்வதில் ஆந்தை சினிமா அப்டேட் குழு மகிழ்ச்சிக் கொள்கிறது

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/12/anm-682x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/12/anm-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்அதையொட்டி நம்ம கட்டிங் கண்ணையா சேகரிச்சு அனுப்பிய சேதியிதோ: ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட ஏ.வி.எம். திரைப்பட நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த சரவணன் பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் பலருகு படிப்பினையாக வாழ்ந்துக் காட்டுகிரார் இவர் இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளை...