சினிமா செய்திகள்

இறுதிக்கட்டத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’

இன்று நேற்று நாளை’ பட டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடிச்சு வரும் ‘அயலான்’ திரைப்படம் லாஸ்ட் 2018-ம் ஆண்டு ஜூன் மாசத்தில் துவங்கியது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், யோகிபாபு, இஷா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றாய்ங்க.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் வேற்றுக்கிரகவாசியும், சிவகார்த்திகேயனும் கையில் மிட்டாய் வைத்தபடி இருந்தாய்ங்க. இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்தை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாச்சு.

அதற்கு பின்னர் தொடங்கப்பட்ட ‘டாக்டர்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இன்று முதல் ‘அயலான்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகவும், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ஷூட்டிங்கில் இணைந்திருப்பதாகவும் படக்குழு தகவல் தெரிவிச்சிருக்குது