வணக்கம் தயாரிப்பாளர் சொந்தங்களே,

தேர்தலில்
வெற்றியடைவது எல்லோருக்கும் எளிதாக நடந்து விடுகிற
விஷயமில்லை.
அப்படி வெற்றி பெற்றாலும், செய்வதாக சொன்ன விஷயங்களை வெற்றி பெற்றவர் செய்வதும் எளிது அல்ல. இன்று நடைபெறும் தயாரிப்பாளர் சங்க தேர்தலை இந்த நோக்கிலேயே தான் அணுக வேண்டியுள்ளது. இருந்தாலும் யார் வெற்றி பெற்றாலும் அவர்களை மனதார வாழ்த்துவதுதான் சங்கமாக அனைவரும் செய்ய வேண்டிய முதல் முன்னெடுப்பு.

வெற்றிக்கு குறைவான வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களை பிடிப்பவர்களுக்கு ஒரு சொல்..நீங்கள்
தோற்று போகவில்லை.
சங்கமும் தயாரிப்பாளர்களும் மீண்டு வர வேண்டும் என்று
உண்மையாக இந்த தேர்தலில் கலந்து கொண்டீர்கள் என்றால் நீங்களும் வெற்றி பெற்றவரே! நண்பர்களுக்குள் நடக்கும் மல்யுத்த போட்டியாக இதை கருதி கொள்ளலாமே. அங்கு வெற்றி பெற்ற நண்பர்களின் மேல் பொறாமையோ, தோற்ற நண்பர்கள் மேல் பழிப்போ இருக்காது அல்லவா. அந்த மனநிலை ஒன்றே இரு சாராரும் கைக்கொள்ள வேண்டியது, இன்றைய தேர்தலுக்கு பிறகு!

ஒரு நோயுற்ற குழந்தையை எப்படி பெற்றோர் கண்ணும் மணியுமாக பராமரித்து தேற்ற எல்லா வகையிலும் முயற்சி எடுப்பார்களோ அந்த அளவு உழைப்பும் தீவிரமும் இப்போது தேவைப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று பேரிடர் நோய் தோற்று வேறு. கொரோனா நோயில் கடும் பாதிப்பை தொழில் ரீதியாகவும் சந்தித்து கொண்டு இருக்கிறோம். தலைமைக்கு வருபவர்கள் ஒரு ஆவேசமான மனநிலையில் இயங்கினால் அன்றி சங்கத்தை மீட்டெடுப்பது கடினம். வாக்கு அளிப்பவராக இதை அனைத்தையும் யோசிக்க வேண்டும். இதற்கு முன் நடந்த தேர்தல்களை போன்று இதை கருத கூடாது. அலட்சியமாகவோ ஒரு நாளின் பணத்தேவை நிறைவேறியது என்றோ நாம் வாக்கு அளித்தால் போராடி கொண்டு பெரும் நெருக்கடியில் இருக்கும் தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளை மேலும் சிக்கல் ஆக்கிய குற்ற உணர்வுதான் நமக்கு மிஞ்சும்.

இளைஞர்களும் பெண்களும் களத்தில் இருப்பது நிரம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் எந்த அணியாக இருந்தாலும் வாக்கு அளிக்க வேண்டும். பெண்களை ஊக்குவிக்க கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட கூடாது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அதை உறுதி செய்யும்.

இறுதியாக ஒன்று, திரைப்படதுறை என்ற ஆரவார கடலின் அச்சாணி தயாரிப்பாளர்கள் தான். புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்களும் நடிகைகளும் இன்ன பிறரும் இந்த துறை சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தயாரிப்பாளர்களுக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளார்கள். அவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ தயாரிப்பு சங்கத்தில் இருக்கும் நாம் நினைக்க வேண்டும். நாம் அளிக்கும் வாக்கு பின்னர் யோசித்து வருத்தப்படுவது போல் ஆகி விட கூடாது. கரைந்த நிழல்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தயாரிப்பாளர்களின் வாழ்வில் வெளிச்சத்தை அளிக்கும் தேர்தலாக இன்று அமைய வேண்டும். அது நம் ஒவ்வொருவரின் கையில் தான் உள்ளது.

நன்றி

கே எஸ் தங்கசாமி
தயாரிப்பாளர் & இயக்குனர்
“ராட்டினம் பிக்சர்ஸ்”

ராட்டினம்\எட்டுத்திக்கும் மதயானை

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/rati-1-1024x468.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/rati-1-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்வணக்கம் தயாரிப்பாளர் சொந்தங்களே, தேர்தலில் வெற்றியடைவது எல்லோருக்கும் எளிதாக நடந்து விடுகிற விஷயமில்லை. அப்படி வெற்றி பெற்றாலும், செய்வதாக சொன்ன விஷயங்களை வெற்றி பெற்றவர் செய்வதும் எளிது அல்ல. இன்று நடைபெறும் தயாரிப்பாளர் சங்க தேர்தலை இந்த நோக்கிலேயே தான் அணுக வேண்டியுள்ளது. இருந்தாலும் யார் வெற்றி பெற்றாலும் அவர்களை மனதார வாழ்த்துவதுதான் சங்கமாக அனைவரும் செய்ய வேண்டிய முதல் முன்னெடுப்பு. வெற்றிக்கு குறைவான வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களை பிடிப்பவர்களுக்கு ஒரு சொல்..நீங்கள் தோற்று போகவில்லை. சங்கமும் தயாரிப்பாளர்களும்...