*
*வெளிநாட்டில் மேடையேறி பேசும்போதெல்லாம் மோடி திருக்குறளை வைத்து பேசுவார் எனவே மோடி தமிழ் வளர்ப்பவர் என்கிறார் – நடிகை காயத்ரி ரகுராம்…*

இந்தி மொழி கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக *தமிழ் எங்கள் வேலன் இந்தி நம்ம தோழன்* எனும் வாசகம் பொருந்திய டீ-சர்ட்டை வெளியிட்டு நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை காயத்ரி ரகு ராம்.

மேலும் *பாரத பிரதமர் மோடி தமிழுக்கு எதிரானவர் அல்ல வெளிநாடு செல்லும் போதெல்லாம் தமிழ் திருக்குறள் சொல்லியே பேச ஆரம்பிப்பார்*. அதனால் அவர் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் *இங்கே உள்ள சில அரசியல் தலைவர்கள் திருக்குறள் தெரியாமலும் தமிழும் தெரியாமலும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்* என்று சாடியுள்ளார்.

இன்று பாரதப் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் கிருஷ்ணா நகர் 15 வது தெருவில் நடைபெற்ற
பிறந்தநாள்
விழாவில்
*சென்னை மேற்கு மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் AR கங்காதரன் தலைமையில், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சென்னை சிவா முன்னிலையில்*
பாரதிய ஜனதாவின் கலை மற்றும் கலாச்சார மாநிலத் தலைவியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு 300 ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகளை வழங்கினார். மேலும் ‘தமிழ் எங்கள் வேலன் ஹிந்தி எங்கள் தோழன்’ என்னும் வாசகம் பொருந்திய டி-ஷர்ட்கள், நோட்டு புத்தகம் பேனா உட்பட்ட பொருட்களையும் 200 மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.

விழாவின் இறுதியில் மோடியைப் போல் உடையணிந்து 6 சிறுவர்கள் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மோடி பிறந்தநாளை சிறப்பு சேர்த்தனர்.

மேலும் இந்தி மொழி கற்பதற்கு ஆதரவாக *தமிழ் எங்கள் வேலன் இந்தி நம்ம தோழன்* என்ற வாசகங்கள் பதித்த டீசர்ட்டை வெளியிட்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மாநில ஊடகப் பிரிவு தலைவர் SN பாலாஜி, சங்கீதா, மதிவாணன், MB சசிதரன், தங்கவேல் கலாச்சாரப் பிரிவு நிர்வாகிகள் மாணிக்கம், பாபு முனியாண்டி, நடிகை சாந்தி வில்லியம்ஸ் தங்கராஜ், ராஜேஷ், சங்கீதா பாலன், பஞ்சவர்ணம், கோபால் பூவராகவன் பூபதி, பிரேம்குமார், குமரவேல், வேணுகோபால், சத்தியமூர்த்தி, சூரிய பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மேலும் மகளிர் அணி நிர்வாகிகள் , பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறார் AR கங்காதரன்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/09/IMG-20200918-WA0014-1024x680.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/09/IMG-20200918-WA0014-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்* *வெளிநாட்டில் மேடையேறி பேசும்போதெல்லாம் மோடி திருக்குறளை வைத்து பேசுவார் எனவே மோடி தமிழ் வளர்ப்பவர் என்கிறார் - நடிகை காயத்ரி ரகுராம்...* இந்தி மொழி கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக *தமிழ் எங்கள் வேலன் இந்தி நம்ம தோழன்* எனும் வாசகம் பொருந்திய டீ-சர்ட்டை வெளியிட்டு நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை காயத்ரி ரகு ராம். மேலும் *பாரத பிரதமர் மோடி தமிழுக்கு எதிரானவர்...