க்ரேஸி மோகனுக்கான உண்மையான நினைவேந்தல்
க்ரேஸி மோகன் என்ற மிகப்பெரும் ஆளுமையை ரசிக்காத நபர்கள் நாட்டில் இல்லை எனும் அளவிற்கு எழுத்தாலும் மேடை நாடகங்களாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் க்ரேஸி மோகன்.
சென்றாண்டு உலகை விட்டுப்பிரிந்த அவருக்கு ஒரு உண்மையான நினைவேந்தலை டோக்கியா தமிழ்ச்சங்கம் க்ரேஸி கிரியேஷனுடன் இணைந்து இணையம் மூலமாக மிகச்சிறப்பாக வரும் 12- ஆம் நடத்த இருக்கிறது. தான் வசனம் எழுதும் படங்களிலும் சரி…தான் பங்குபெறும் படங்களிலும் சரி மிகச்சிறப்பான நகைச்சுவைப் பங்களிப்பைத் தந்தவர் க்ரேஸி மோகன். அதனால் இந்நிகழ்வை மிக கலகலப்பாக நடத்த இருக்கிறார்கள். மேலும் க்ரேஸி மோகனுக்காக ஒருபாடலும் உருவாக்கப் பட்டுள்ளது. இப்பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட இருக்கிறார். இந்நிகழ்வில் மேலும் பல பிரபலங்கள் இணையம் வழியாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.