சினி நிகழ்வுகள்டிரைலர்கள்திரைப்படங்கள்நடிகைகள்வீடியோகள்

Keerthy suresh’s Penguin movie trailer

 

 

இந்திய திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகள் சமந்தா அக்கினேனி, டாப்ஸி பன்னு, த்ரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து கீர்த்தி சுரேஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘பெண்குயின்’ டீசரை வெளியிட்டனர்.

அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 19 அன்று பிரத்யேக உலக பிரீமியருக்காக திட்டமிடபட்டுள்ள இந்த உளவியல் த்ரில்லர் தனது குழந்தையை காப்பாற்ற ஒரு தாயின் உடல் மற்றும் உணர்ச்சி பயணத்தை பற்றியதாகும்.

கார்த்திக் சுப்பராஜ், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே பார்வையாளர்களை கவர்ந்ததுள்ளது.

இந்த படத்தில் ஒரு குழந்தையின் தாய் என்ற கதா பாத்திரத்திற்கு ஏற்ப உடல் ரீதியாக தன்னை மாற்றிக்கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 19 ஆம் தேதி தமிழ்மற்றும் தெலுங்கில் மற்றும் டப்பிங்களுடன் மலையாளத்திலும் வெளியாகிறது.

Teaser Link: https://www.youtube.com/watch?v=SY99XrIv0mM&feature=youtu.be