நடிகர்கள் 50 சதவீதம் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 100% முடங்கிப்போன தொழில், சினிமா. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படுமுன்னு தெரியலை. அப்படி எப்படியோ திறந்தாலும் சமூக விலகல் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் சூழ்நிலையில் தியேட்டர்களில் 35% முதல் 50 % பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவாங்கன்னு எதிர்பார்க்கப்படுது. இதுனால் படத்தோட வசூல் 50 சதவீதத்திற்கு மேல் குறைய வாய்ப்பு இருக்குது.
இதை கருத்தில் கொண்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள், நடிகைகளுக்கு நிலைமை சரியாகும் வரையில் 50 சதவீதம் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது குறித்து இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) ஆலோசித்து வருகிறது. அதேபோல தென்னிந்தியாவில் உள்ள மாநில மொழி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருது.
‘நெலைமையை சமாளிக்க இதை விட்டால் வேறு வழியில்லை. பெரிய நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு காரணமே ஓபனிங் காட்சிகள்தான். ஆனால் அதற்கு இப்போது வழியில்லை அப்படீங்கும் போது இந்த மாற்றம் அவசியமாகுது. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வலுவான நிர்வாகம் அமைந்தால்தான் இதனை நடைமுறைக்கு கொண்டு வரமுடியும்’. அப்படி வந்தாலும் சங்கத்துக்கான வலிமை இப்போ ரொம்ப வீக்கா இருப்பதால் புரொடியூசர் கவுன்சிலால் பிரயோஜமுண்டா-ன்னு தெரியலை
இனிமே எப்போ இயல்பு நிலை திரும்பும் என்பது தெரியலை. ஆக, ஊரடங்கு முடிஞ்சு, சினிமா பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என்றால், நடிகர்களும், கலைஞர்களும் அவங்களோட சம்பளத்தைக் குறைக்க வேண்டும். குறைந்தது 50 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும்’ அப்படீங்கற கொரல் அதிகரிச்சிக்கிட்டே போகுது .
இதுக்கிடையிலே தெலுங்கு மற்றும் இந்திப்பட முன்னணி ஹீரோக்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து சம்பள குறைப்பை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மே 3ம் தேதிக்கு பிறகு இந்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று தெரியுது.