நடிகர் லாரன்ஸ் செய்த உதவிக்கு வாய் பேச முடியாத பெண் நன்றி சொல்லியுள்ள வீடியோ வைரல் ஆகி வருது. கொரோனா வைரஸ் நிவாரணமாக நிதியுதவி வழங்கிய லாரன்ஸ், மேலும் தன்னால் முடிந்த வரை பலருக்கு உதவி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் கஷ்டப்படுபவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கி வருகிறார். இதனிடையே நடிகர் லாரன்ஸ் சார்பில் வழங்கப்பட்ட மளிகை பொருட்களை வாங்கி கொண்ட வாய் பேச முடியாத பெண் ஓருவர், சைகை மொழியில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மனதை உருக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருது