கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யூம் திறன் பெற்ற இயக்குநர்களில் கவுதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார்.

பின்னர் காதல், ஆக்ஷன் என இரண்டிலும் தனக்கான இடத்தை பதித்தவர்.

இவரது படங்களில் பிரமாதமான டெக்னிக்கல் ஒர்க், மற்றும் ஸ்கிரீன் பிளே என வித்தியாசமான படைப்பை காணலாம். முன்னனி நடிகர் பலருடன் சேர்ந்து இவர் கொடுத்தப் படைப்புகள், இன்றும் கூட பலரால் பேசப்பட்டு வருகிறது.

இவர் ஒரு இயக்குநர் மட்டுமன்றி வசனம் பின்னனி, பாடல் மற்றும் புரொடியூசர் என அனைத்திலும் தனது திறமையை வெளிபடுத்தியுள்ளர்.

மேனன் 1973 ல் பிப்ரவரி 25 ல் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒட்டப்பாலத்தில் பிறந்தார். இவர் தந்தை மலையாளி, தாய் தமிழ். பிறந்தது கேரளாவில் என்றாலும் வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை பட்டுக்கோட்டையில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் கற்றார் .
கல்லூரிப்படிப்பின் போதே நல்ல கதைகளையும் எழுத ஆரம்பித்துவிட்டார்.

அப்போதே மேனனுக்கு தான் ஒரு இயக்குநராக ஆக வேண்டும் என்ற ஆசை “டெப்த் ஆன்ட் அஸ்தெடிக்ஸ்” என்ற ஆங்கில படத்தை பார்த்த போது தோன்றியதாம். தனது ஆசைக்கு பெற்றோர்களும் கைக்கொடுக்க 1997ஆம் ஆண்டு மின்சாரக் கனவு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இயக்குநராக உலாலா படத்தை 2000 ல் இயக்க ஆரம்பித்தார். மாதவன்,ரீமா சென் மற்றும் அப்பாஸ் நடித்த இப்படம் 2001 ஆம் ஆண்டு மின்னலே என்னும் தலைப்பில் திரைக்கு வந்தது. இப்படத்தில் தான் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமனார். தமிழ் ரொமான்டிக் படமான மின்னலே ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்றதாக்கும்.

இதே மின்னலே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து தரும்படி வந்த வாசு பஹானி என்னும் தயாரிப்பாளர் அழைப்பை ஏற்று படத்தில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டார். ஆனால் இது தமிழில் பெற்ற வெற்றியை ஹிந்தியில் அடைய தவறிவிட்டது. அதற்கு அடுத்த படமாக தமிழில் இரு விழி உனது கதையை தயார் செய்தார்.

ஆனால் ஏதோ காரணத்தால் நின்று போனது.

பிறகு 2003 ல் காதலும் ஆக்டஷனும் கலந்த காக்க காக்க படத்தை இயக்கினார். ஹீரோயினாக ஜோதிகா முடிவாக, அவரின் பரிந்துரையின் பெயரில் ஹீரோவாக சூரியாவை முடிவுசெய்தார். இதற்காக சூரியாவை கமாண்டோ டிரெய்னிங் பள்ளியில் சேர்த்து பயிற்சி பெற வைத்தார். 2003 ல் வெளிவந்த காக்க காக்க படம் பெறும் வெற்றி அடைந்தது. மணிரத்தினம் மற்றும் ராம் கோபால் வர்மா போன்ற பிரபலமான இயக்குநர்களின் பெயர் பட்டியலில் மேனன் பெயரும் சேர்ந்தது. இதே படைத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்து படத்தை வெளியிட்டார்.

காக்க காக்க வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. கமல்ஹாசனின் யோசனைப்படி உருவாக்கப்பட்ட கதை வேட்டையாடு விளையாடு. இப்படம் தயாரிப்பின் போது புரொடியூசர் சூசைட் அட்டெம்ப்ட் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்திருந்தாலும், 2006 ல் வெளியிட்ட போது பெறும் வெற்றியை பெற்றது. இது மேனனின் மூன்றாவது வெற்றி. இம்மூன்று படங்களும் பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட்டும் அடித்தது. மேலும் இதே படத்தை ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் கொண்டு இயக்கி வெளியிட்டார்.

அப்பாலே அவர் இயக்கிய பச்சை கிளி முத்துச்சரம் 2007 ல் வெளியானது. இது நல்ல விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட் கொடுக்கவில்லை. இப்படத்தின் இயக்கத்தின் போது தான் மேனனின் தந்தை காலமானார். அதன் தாக்கத்தால் தான் படத்தை சிறப்பாக வெளியிட முடியாததாக கூறினார்.

இப்படத்தின் தோல்வியை அடுத்து சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை இயக்கினார். திரிஷா ஹீரோயினாக நடித்த இப்படம் 30 நாட்கள் மட்டுமே படம் பிடிக்கப்பட்டது. மேலும் காலம் தள்ளிப் போக போக படம் முற்றிலும் கைவிடப்பட்டது.

2006 ம் ஆண்டு மேனன் தனது தந்தையின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது சுயக்கதையை அடிப்படையாகக் கொண்டு(70%) இயக்கிய படமே வாரணம் ஆயிரம். இரண்டு வருடமாக எடுத்த இப்படம் குடும்பம், ஆக்ஷன், ரொமான்டிக் என அனைவரும் காணும் குடும்ப படமாக உருவானது. படத்தின் பாடல்கள் முதல், அதில் அறிமுகமான சமீராரெட்டி வரை அனைத்து ரசிகர்களாலும் கவரப்பட்டனர். இப்படத்தின் கதாநாயகனான சூரியா மகன் ,தந்தை என இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இப்படமே மேனனின் இயக்கத்தில் வெளிவந்து அதிக வசூலைப் பெற்றப்படம். இப்படத்திற்க்கு பிறகு தான் மேனனுக்கும், ஹாரிஷ் க்கும் இடையேயான நட்பு முறிந்தது. இருவரும் இனி சேர்ந்து பணிப்புரிய மாட்டோம் என்ற செய்தியையும் வெளியிட்டனர்.

பிறகு சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் மேனன் வடிவமைத்த காதல் கதை தான் விண்ணை தாண்டி வருவாயா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் இயக்கப்பட்டது. தமிழில் சிம்பு மற்றும் திரிஷா ஜோடியிலும், தெலுங்கில் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடியிலும் 2010ல் வெளிவந்தது. மனதை தொடும் காதல் கதையும், அதற்கேற்ப மனதை வருடும் ஏ.ஆர். ஆரின் பாடல்களும் ரசிகர்களின் பெறும் வரவேற்ப்பை பெற்றது. இது மேனனின் புகழை நிலைநாட்டியது.

இப்பட இயக்கத்தின் போதே இடையில் படமாக்கப்பட்ட கதை தான் நடுநசி நாய்கள். ஒரு உண்மை கதையையும், நாவல் கதையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட படமே நடுநசிநாய்கள். இப்படம் 2011 ல் திரைக்கு வந்தது. இப்படம் மாறுப்பட்ட கருத்துகளையும், எதிர்ப்புகளையும் பெற்றது. ரசிகர்களின் கவனத்தை கவரத் தவறியதால் இப்படம் பெரிதும் பேசபடவில்லை. மாறாக மேனனின் கதைக்கு வந்த எதிர்ப்புகள், போராட்டங்கள் பற்றியே பேசப்பட்டது.

நடுநசிநாய்கள் படத்தின் தோல்வியை தொடர்ந்து 2012 ல் விண்ணை தாண்டி வருவாயாவின் ஹிந்தி ரீமேக்கை வெளியிட்டார். ஆனால் அப்படமும் பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட் கொடுக்கவில்லை.

இதனை அடுத்து ரொமான்டிக் படமான நீதானே என் பொன் வசந்தம் படத்தை வெளியிட்டார். இப்படம் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வெளியானது. எதிர்பார்த்த அளவு இன்றியும் இப்படம் ஓரளவு நல்ல விமர்சனங்களையே பெற்றது.

இதனை அடுத்து 2013 சூரியா, திரிஷா மற்றும் அருண்விஜய் நடிப்பில் துருவநட்சத்திரம் படம் துவங்கப்பட்டது. அதன் அறிமுகப் போஸ்டர் வெளியிட்ட நிலையில் சூரியா படத்தை விட்டு வெளியேறிய காரணத்தால் படம் நின்று போனது.

பின் அதே வருடம் சிலம்பரசன் மற்றும் பல்லவி சுபாஷ் இணைப்பால் சட்டென்று மாறுது வானிலை படத்தை துவங்கி 30 நாட்கள் படம் பிடிக்கப்பட்டது.

அப்படத்தின் இயக்கத்தின் போது இயக்குநர் மணிரத்தினம் கொடுத்த வாய்ப்பின் பெயரில் 2014 ஆம் ஆண்டு தல அஜித் கதாநாயகனாக நடிக்க மணிரத்தினம் தயாரிக்கும் என்னை அறிந்தால் படம் இயக்க கையெழுத்திட்டார். இதனால் சட்டென்று மாறும் வானிலை படம் நிறுத்திவைக்கப்பட்டது. 2015 வெளியான இப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் மக்கள் வரவேற்றனர். இந்த படத்தில் ஹாரிஷ் ஜெயராஜக்கும், மேனனுக்கும் இடையே இருந்த நெருடல் முடிவுபெற்று இணைந்து பணிபுரிந்தனர். என்னை அறிந்தால் படம் அனைத்து மக்களையும் கவரும் படி அமைந்தது. சுமார் ஐந்து வருடங்களுக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது இப்படத்தில் தான்.

என்னை அறிந்தால் வெற்றியை தொடர்ந்து மேனன் தான் பாதியில் விட்ட சட்டென்று மாறுது வானிலை படத்தை மீண்டும் இயக்க ஆரம்பித்தார். இப்படத்தில் இருந்து பல்லவி விலக அவர் இடத்தை நிரப்பினார் மஞ்சுமா மோகன். பின் இப்படம் 2016 ல் அச்சம் என்பது மடமையடா தலைப்பில் திரைக்கு வந்தது. ஆனால் பெறும் கால தாமதத்தினால் படம் எதிர்பார்ப்பை இழந்தது. ஆனாலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

2016 ல் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கியது அதன் ரிசல்ட்டும் தெரிந்ததுதான்.. தற்போது ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிச்சு வருது.

எனி வே ஹேப்பி பர்த் டே மேனன் -ஜி

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/02/Gautham-Menon-Wiki.v3.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/02/Gautham-Menon-Wiki.v3-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யூம் திறன் பெற்ற இயக்குநர்களில் கவுதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார். பின்னர் காதல், ஆக்ஷன் என இரண்டிலும் தனக்கான இடத்தை பதித்தவர். இவரது படங்களில் பிரமாதமான டெக்னிக்கல் ஒர்க், மற்றும் ஸ்கிரீன் பிளே என வித்தியாசமான...