சினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தரவரிசைதிரை விமர்சனம்திரைப்படங்கள்

மாஃபியா-விமர்சனம்

அருண் விஜய்க்கு ஒரு ஆக்‌ஷன் மாஸ்டர் அந்தஸ்த்தை வழங்கும் படமாக உருவாகி இருக்கிறது மாஃபியா. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக அவர் பிரசன்னா கேங்கை வேட்டையாடுவது தான் படத்தின் ஒற்றை வரிக்கதை. நடிப்புப் பயணத்தில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அருண் விஜய் வெறித்தனமான நடிப்பை வழங்கி இருக்கிறார். பிரசன்னாவும் அவர் பிரசன்னமாகும் நேரத்தில் இருந்து படம் முடியும் வரை மாஸ் காட்டியுள்ளார். பிரியபவானி சங்கரின் கம்பீரம் அசரடிக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் பிரியா பவானி சங்கர் குறிவைக்கும் கன் ஷாட்ஸ் எல்லாம் செம்ம எனர்ஜி.

படத்தின் மேக்கிங் ஸ்டைலிஷாக இருக்கிறது. அந்த ஸ்டைலிஷை திரைக்கதைக்குள்ளும் புகுத்தி இருக்கலாம். பின்னணி இசை ஒரு மாஸ் படத்திற்கான மாஸை கூட்டியுள்ளது. ஒளிப்பதிவில் மேஜிக் காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். சவுண்ட் எபெக்ட்ஸ் கலர்ஸ் இரண்டும் ஹாலிவுட் படத்திற்கு நிகரான தரம்.

இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம் என்றாலும் முன்பாதியில் இன்னும் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம். முடிவில் சேப்டர் 2-வுக்கு கொடுக்கும் லீட் காட்சிகள் அதகளம். மாஃபியா ஆக்‌ஷன் ரசிகர்களை கவர்வார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *