காட்ஃபாதர் ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கும் கதை மட்டுமல்ல இரு அப்பாக்களுக்கு இடையே நடக்கும் கதையும் கூட. மனைவி அனன்யா மகன் அஸ்வந்த் இவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நட்டி. மற்றொரு பக்கம் கொலைகளைச் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள லால் தன் மகனுக்குத் தேவைப்படும் உடல் உறுப்பு ஒன்றிற்காக நட்டியின் மகனை கூறு போட நினைக்கிறார். லால் எனும் தாதா அப்பாவை நட்டி என்ற அப்பாவி அப்பா எப்படி டீல் செய்து தன் மகனை காப்பாற்றுகிறார் என்பதே காட்ஃபாதர்.

படம் துவங்கி இருபது நிமிடத்திற்குப் பிறகு படம் முழுதும் ஒரு அடுக்கு மாடி கட்டடத்திற்குள் தான் நடக்கிறது. ஆனாலும் படம் நொடிக்கு நொடி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும். திரைக்கதையில் அவ்வளவு டெக்னிக்கல் உத்தியைக் கையாண்டுள்ளார் இயக்குநர் ஜெகன்ராஜ்சேகர். பாடல்களும் பின்னணி இசையும் கதைக்குத் தேவையான உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளது. ஒளிப்பதிவும் ஒரே இடத்தில் சுற்றுகிற படத்தை டெப்ட்த்தாக காட்டி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. க்ளைமாக்ஸிக்கு அடுத்து வரும் ஒரு எக்ஸ்ட்ரா க்ளைமாக்ஸைத் தவிர்த்து இருக்கலாம்.

அப்பாவாக நடித்துள்ள நட்டிக்கு இப்படம் அவர் திரை வாழ்க்கையில் ஓர் மைல்கல் என்றே சொல்லலாம். அபாரமாக நடித்து அப்ளாஸை அள்ளுகிறார். அனன்யா தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். இவர்களின் மகனாக வரும் அஸ்வந்த் நடிப்பில் நம் மனதைக் கொள்ளை கொள்கிறான். மேலும் வில்லனாக வரும் லாலின் முரட்டுத்தனமும் மிரட்டும் தொனியும் அசரடிக்கிறது.
சின்னச் சின்ன லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் குறைவான முதலீட்டில் ஒரு நிறைவான படத்தைத் தர முடியும் என்பதை காட்ஃபாதர் நிரூபித்துள்ளது

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/02/IMG_20200220_184805-1024x791.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/02/IMG_20200220_184805-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்தமிழக செய்திகள்தரவரிசைதிரை விமர்சனம்காட்ஃபாதர் ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கும் கதை மட்டுமல்ல இரு அப்பாக்களுக்கு இடையே நடக்கும் கதையும் கூட. மனைவி அனன்யா மகன் அஸ்வந்த் இவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நட்டி. மற்றொரு பக்கம் கொலைகளைச் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள லால் தன் மகனுக்குத் தேவைப்படும் உடல் உறுப்பு ஒன்றிற்காக நட்டியின் மகனை கூறு போட நினைக்கிறார். லால் எனும் தாதா அப்பாவை நட்டி என்ற அப்பாவி அப்பா எப்படி டீல்...