அதகளப்படுத்திய சங்கத்தலைவன் ஆடியோ லான்ச்

சினி நிகழ்வுகள் சினிமா செய்திகள் தமிழக செய்திகள்

ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவே அப்படத்தின் தரத்தை தீர்மானிக்கும். தீர்மானமாகச் சொல்லலாம் சங்கத்தலைவன் தரமான படைப்பு என்று. ஏன் என்றால் அந்தப்படத்தின் ஆடியோ லான்ச் இன்று அவ்வளவு அமர்க்களமாக இருந்தது. இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருக்கும் இப்படத்தை அவரது நண்பரும் அவரிடம் பணியாற்றியவருமான மணிமாறன் இயக்கி இருக்கிறார். உதயகுமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி லீட்ரோலில் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று மணிமாறன் பேசும்போது, “போராட்டங்கள் எப்படியும் வென்றே தீரும். அதற்கு நாம் நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்” என்றார். மேலும் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், சுப்பிரமணிய சிவா, சமுத்திரக்கனி, கருணாஸ், உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *