திரை விமர்சனம்

வெள்ளக் குதிர — திரை விமர்சனம்

நடுத்தர குடும்பத்தின் அனுதின போராட்ட வாழ்க்கையில் நொந்து போகும் நாயகன், ராங்
ரூட்டில் போயாவது சீக்கிரமே செட்டில் ஆக வேண்டும் என்றஎண்ணத்தில் இருக்கிறார். அதற்காக தவறான பாதையை தேர்ந்தெடுத்து மாட்டிக் கொண்டதில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதாகிறது.
இந்த நிலையில்
தனது மனைவி மகனுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்து வருகிறார்.
அவர் நேரம் மீண்டும் சட்ட விரோதமான தொழிலை செய்யத் தொடங்குகிறார். விசேஷங்களுக்காக மட்டுமே அங்கே தயாரிக்கப்படும் போதை தரும் மூலிகை ரசத்தை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கிறார்.
இதற்கிடையே, அந்த மலைக் கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரிக்கும் வேலையை ரகசியமாக செய்து வருகிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அவரது திட்டத்தை அம்பலப்படுத்துகிறார் கதிரின் மனைவி. இதனால் அந்த பெண்மணி முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் பகைக்கு ஆளாகிறாள்.
இந்த நிலையில் சட்ட விரோத மது வியாபாரத்துக்காக கதிரை போலீஸ் தேட…

கதிர் குடும்பத்தின் மீதான முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பகை என்னவானது… அந்த மலை கிராமத்தில் கதிர் தம்பதிகளால் தொடர்ந்து இருக்க முடிந்ததா என்பது கதைக்களம்.
கதையின் நாயகன் கதிராக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. திருந்தி விட்டதாக மனைவியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மறுபடியும் தவறான ரூட்டை தேர்ந்தெடுக்கும் இடத்தில் குற்ற உணர்வு சிறிதும் இல்லாத அந்த முக பாவம் நடிப்பில் தேர்ந்தவர்களால் மட்டுமே வெளிப்படுத்தக்
கூடிய ஒன்று. அவரது மனைவியாக வரும் அபிராமி போஸ், அநீதியை தட்டி கேட்கும் கிராமத்து பெண் கேரக்டரில் பிரமாதப் படுத்துகிறார்.
முன்னாள் ஊர் தலைவர், போஸ்ட் மாஸ்டர் பெண்மணி, கையெழுத்து போடத் தெரியாத பஞ்சாயத்து தலைவி, மலை கிராம மக்களுக்கு உதவியாக இருக்கும் முருகன் கேரக்டரில் வருபவர், அந்த மனப்பிறழ்வு பாட்டி மற்றும் கிராம மக்கள் என நடிப்பில் யாரும் சோடை போகவில்லை. தங்கள் கேரக்டர்களில் அப்படி ஒரு வெளிச்சம் பாய்ச்சு கிறார்கள்.
பின்னணி இசை மூலம் மனதில் தடம் பதிக்கிறார் இசை அமைப்பாளர் பரத் ஆசிகவன் .
ஒளிப்பதிவாளர் ராம் தேவ் தரமான காட்சிப் பதிவில் கிராமத்தோடு நம்மையும் இணைத்துக் கொள்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் சரண்ராஜ் செந்தில்குமார், சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அங்கு புதிதாக குடியேறிய கதிர் குடும்பத்து பின்னணியில் தெளிவாக சொல்லி இருக்கிறார். முடிவு வரையிலும் தடை இல்லாத அவரது கதை சொல்லல் நன்று. உறுதிகளை குவிக்கப் போகும் இந்த படம்
மலை கிராம மக்களின் வலிகளை புதிய கோணத்தில் சொல்வதில் தனி முத்திரை பதிக்கிறார்.