திரை விமர்சனம்

ரிவால்வர் ரீட்டா — திரை விமர்சனம்

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷ் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே குடும்பத்தை தாங்குகிறார். அப்பா இல்லாத நிலையில் அம்மா, திருமணமான அக்கா, தங்கை என எல்லோரையும் பராமரிக்கும் பொறுப்பு அவருடையது.
.புதுச்சேரியைக் கதிகலங்க வைக்கும் தாதா சூப்பர் சுப்பராயன். அவருக்குப் பெண் மோகம் உண்டு. அதை பயன்படுத்தி அவரை கொல்ல திட்டமிடுகிறது ஒரு கூட்டம்.
ஒரு நாள் வழக்கமான புரோக்கர் ஒருவரின் அழைப்பில் விலைமாதுவை சந்திக்க வரும் இடத்தில் அவரைப் போட்டுத் தள்ள திட்டம் தயாராகிறது.
ஆனால் நடந்தது வேறு. தவறுதலாக அவர் கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார்.
அப்போது கீர்த்தி சுரேஷும் அவரது குடும்பமும் சேர்ந்து அவரை தாக்க, தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரை விடுகிறார் சூப்பர் சுப்பராயன். கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, சட்ட விரோதமாக சடலத்தை அப்புறப்படுத்த மொத்த குடும்பமும் களத்தில் இறங்குகிறது.

ஆனால் நினைத்தபடி அதைச் செய்ய முடியாதளவுக்கு காவல்துறை அதிகாரியின் பழிவாங்கும் நோக்கம், வில்லன்களின் துரத்தல் என பல போராட்டங்களை சந்திக்கிறது கீர்த்தி சுரேஷ் குடும்பம்.

இறுதியில் கீர்த்தி சுரேஷ் சடலத்தை அப்புறப்படுத்தினாரா? கொலைப் பழியிலிருந்து தப்பித்தாரா? என்பது மீதிக் கதை.

திருமணத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாகும் படம். அவரும் அந்த இடைவெளியை தனது நடிப்பால் நிரப்பி விடுகிறார். அம்மாவைச் செல்லமாகக் கண்டிப்பது, பழிவாங்கத் துடிக்கும் காவல்துறை அதிகாரியை அவருடைய பாணியிலேயே பழி வாங்குவது, வில்லன்களின் கூட்டத்தை சாதுரியமாக கையாளுவது என்ன கிடைக்கும் இடங்களில் எல்லாம் நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார்.

பக்திப் பரவச அம்மாவாக வரும் ராதிகா, வெகுளி த்தனமும் வில்லங்கமும் இணைந்த அந்த பாத்திரத்தை வெகு நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்.
வில்லன்களாக வரும் சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ் கெத்து குறையாத வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிங்ஸ்லி சிரிக்க வைத்துள்ளார். கழிவறையில் தாழ்ப்பாளைத் திறப்பதற்கு உணவு டெலிவரி செய்யும் அவரது யோசனை டூ மச் என்றாலும் சிரிக்க முடிகிறது.

மற்ற வேடங்களில் வரும் சென்ராயன், சுரேஷ் சக்கரவர்த்தி, ப்ளேடு சங்கர், ராமச்சந்திரன் உட்பட அனைவரும் சோடை போகாத சூப்பர் நட்சத்திரங்கள்m இயக்குநர் உருவாக்கிய தங்கள் கேரக்டருக்கு உரிய நியாயம் செய்து இருக்கிறார்கள்.
சான் ரோல்டனின் பின்னணி இசை சிறப்பு.

ஒரு சடலத்தை மறைக்க ஒரு சாமானியப் பெண் என்ன செய்ய முடியும் என்பதை பரபரப்பு டன் காமெடியை இணைத்துக் கொடுத்திருக்கிறார் காட்சி நகைச்சுநடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அப்பா இல்லாத நிலையில் அம்மா, திருமணமான அக்கா, தங்கை என எல்லோரையும் சுமக்கும் பொறுப்பு அவருடையது.புதுச்சேரியைக் கதிகலங்க வைக்கும் கொடூரன் சூப்பர் சுப்பராயன். அவருக்குப் பெண் மோகம் உண்டு.

ஒரு நாள் விலைமாதுவைச் சந்திக்கப் புறப்படும்போது தவறுதலாக கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார்.
அப்போது கீர்த்தி சுரேஷ் அவரை பலம் கொண்டு தாக்குகிறார். தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அந்த இடத்திலேயே உயிரை விடுகிறார் சூப்பர் சுப்பராயன். கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, சட்ட விரோதமாக சடலத்தை அப்புறப்படுத்த மொத்த குடும்பமும் களத்தில் இறங்குகிறது.

ஆனால் நினைத்தபடி அதைச் செய்ய முடியாதளவுக்கு காவல்துறை அதிகாரியின் பழிவாங்கும் நோக்கம், வில்லன்களின் துரத்தல் என பல பின்னடைவுகளைச் சந்திக்கிறார்கள்.

இறுதியில் கீர்த்தி சுரேஷ் சடலத்தை அப்புறப்படுத்தினாரா? கொலை பழியிலிருந்து தப்பித்தாரா? என்பது மீதிக் கதை.

திருமணத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாகும் படம் என்பதால் ஆரம்பத்திலிருந்து ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதை தனது இயல்பான நடிப்பால் மிக எளிதாகக் கடக்கிறார். அம்மாவைச் செல்லமாகக் கண்டிப்பது, பழிவாங்கத் துடிக்கும் காவல்துறை அதிகாரியை அவருடைய பாணியிலேயே பழிவாங்குவது, வில்லன்களின் விரல்களை வைத்தே அவர்களின் கண்களில் குத்துவது என மிக அழுத்தமான கதாபாத்திரத்தை நேர்த்தியாகவ் செய்திருக்கிறார்.

பக்திப் பரவசத்தோடு வரும் ராதிகா, அம்மா வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருப்பதோடு தன் அனுபவத்தால் திரை இருப்பை தனதாக்கிக் கொள்கிறார்.

வில்லன்களாக வரும் சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ்,காவல்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய் ஆகிய அனைவரும் பதட்டம் இல்லாமல் நடித்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிங்ஸ்லி சிரிக்க வைத்துள்ளார். கழிவறையில் தாழ்ப்பாளைத் திறப்பதற்கு உணவு டெலிவரி செய்யும் யோசனை டூ மச் என்றாலும் சிரிக்க முடிகிறது.

மற்ற வேடங்களில் வரும் சென்ராயன், சுரேஷ் சக்கரவர்த்தி, ப்ளேடு சங்கர், ராமச்சந்திரன் உட்பட அனைவரும் இயக்குனர் தந்த கேரக்டர்களுக்கு தங்கள் நடிப்பால்
கனம் சேர்த்து இருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் பிளாக் காமெடி படத்துக்கு எற்ப வித்தியாசமான வண்ணத்தில் ஒளிப்பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார்.

பாடல்கள் இல்லை என்பதால் பின்னணியிலேயே தன் இருப்பை வெளிப்படுத்தி உள்ளார் இசையமைப்பாளர் சான் ரோல்டன்.

ஒரு சடலத்தை மறைக்க ஒரு சாமானியப் பெண் என்ன வெல்லாம் செய்வாள் என்பதை ஒரு புத்திசாலிப்
பெண்ணின் கோணத்தில் அணு கி இருக்கிறார் இயக்குனர் ஜே கே சந்துரு. அதுவே படத்துக்கு பிளஸ் ஆகி விடுகிறது.
படத்தில் கீர்த்தி சுரேஷ் இன்னொரு பிளஸ்.