கம்பி கட்ன கதை — திரை விமர்சனம்
அப்பாவி மக்களை ஏமாற்றி காசு பார்க்கும் நாயகன் நட்டி நட்ராஜ் கையில் பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்று கிடைக்க, அதை காட்டுப்பகுதி ஒன்றில் குழி தோண்டி புதைத்து வைக்கிறார். வைரக்கடத்தலு க்காக போலீஸ் அவரை கைது செய்கிறது. கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கிறது.
சிறை வாசம் முடிந்து வெளியே வரும் நட்டிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடம் அரசியல்வாதி ஒருவரால் அபகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த
இடத்தில் கோவில் ஒன்றையும் அரசியல்வாதி கட்டி வைத்திருக்கிறார்.
இப்போது வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொள்கிறார்.
சாமியாராக இருந்து கொண்டே வைரத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இந்த முயற்சியில் அந்த வைரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பதை கல கல காமெடி சகிதம் சொல்லி இருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் நட்டிக்கு இது மாதிரியான கதாபாத்திரங்கள் என்றால் அவரது நடிப்பே வேறு லெவல் ஆகி விடும்.
சாமியாராக நடிப்பில் பிரித்து
மேய் ந்திருக்கிறார். நடிக்கும் வாய்ப்பை விட, பேசும் வாய்ப்பு அதிகம். அதிலும் ரசிக்க வைக்கிறார்.
இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் முகேஷ் ரவி, காதலில் பாஸ் மார்க். நடிப்பில் ஆவரேஜ்.
நட்டி ஜோடியாக வரும் ஸ்ரீரஞ்சனி அழகாக இருக்கிறார்
நடிப்பை அடுத்து வரும் படங்களில் பார்க்கலாம்.
முகேஷ் ரவியின் ஜோடி ஷாலினி காதல் காட்சிகளில் கவர்கிறார்
நட்டியின் சீடராக வரும் சிங்கம் புலிக்கு நீண்ட நாளைக்கு பிறகு அடித்த ஜாக் பாட் இந்த படம். முழுக்க சிரிக்க வைக்கும் கதாபாத்திரத்தில் சிக்சராக விளா சுகிறார். ஏழெட்டு
மனைவிகளை வைத்துக் கொண்டு குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கும் முல்லை கோதண்டம், வரும் கொஞ்ச நேரத்திலும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருகிறார். முருகானந்தம், சாம்ஸ் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.சாமியாரிடம் ஏமாந்து போகும் எம் எல் ஏ. வாக வழக்கு எண் முத்துராமன் கச்சிதம்.
ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷின் கேமரா காட்சிகளை கண்களுக்குள் நிறைவாக கொண்டு சேர்க்கிறது.
இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓஹோ ரகம்.
திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியிருக்கும் தா.முருகானந்தத்தின் வார்த்தை
ஜாலங்களில் நகைச்சுவை கொட்டுகிறது.
ராஜநாதன் பெரியசாமி இயக்கியிருக்கிறார். நட்டியின் சாமியார் வேடம் நித்யானந்தாவை நினைவுபடுத்துகிறது. அதற்கேற்ப பொய்லாசா என்கிற தீவுக்கு அவர் அதிபதியாவது போல் கிளைமாக்ஸ் வைத்திருப்பது அதை உறுதி செய்கிறது. நகைச்சுவையே பிரதானம் என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்காமல் சிரித்து விட்டு வரலாம்.
