செய்திகள்

உலகிலேயே முதல் முறையாக தண்ணீரில் இருந்து பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி – HONC Gas Pvt. Ltd. புதிய கண்டுபிடிப்பு

HONC Gas Pvt. Ltd. நிறுவனம் தனது ஆலையில் HONC Gas Generator குறித்து நேரடி செயல்விளக்கம் வழங்கியது. உலகிலேயே முதல் முறையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்து நேரடியாக பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

மேம்பட்ட Gyroid Electrolytic Medium (GEM) தொழில்நுட்பம் மூலம், எரிவாயுவை சேமிக்க சிலிண்டர்கள் தேவையில்லை என்பதும், எரிவாயு கசிவு அல்லது வெடிப்பு ஆபத்து முற்றிலும் தவிர்க்கப்படும் என்பதும் விளக்கப்பட்டது.

நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி திரு. பேளூர் ராமலிங்கம் கார்த்திக் உரையாற்றும்போது,
“இந்த தொழில்நுட்பம் வெறும் மாற்று எரிசக்தி அல்ல, எரிபொருள் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. ஒரே ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் மிகக் குறைவான மின்சாரம் மூலமாக வீடுகள், தொழிற்சாலைகள், steam turbine generators, வாகனங்கள் என பல்வேறு துறைகளுக்கான தூய்மையான எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும்,” என்றார்.

செயல்விளக்கத்தில் CEO திரு. முத்துக்குமாரசாமி முத்துரத்னம், MD திரு. செந்தில் குமார், முதன்மை இயக்குநரும் அரசியல் தலைவர் திரு. R. சரத்குமார், இணை MD திருமதி. பூரணசங்கீதா செந்தில் குமார் பிச்சை ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும், ராம்ராஜ் காட்டன் தலைவர் S.R. நாகராஜன், வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் S.K.Y. சுந்தர்ராஜன், ஹீரோ பேஷன் நிறுவனத்தின் S.சுந்தரமூர்த்தி, மற்றும் தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்டு இந்த கண்டுபிடிப்பை பாராட்டினர்.

HONC Gas Pvt. Ltd. நிறுவனம் விரைவில் உற்பத்தியை பெருக்கும் திட்டத்துடன் அரசு அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து பசுமை எரிபொருள் உற்பத்தியை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.