சினிமா செய்திகள்

ஜின் தி பெட் – திரை விமர்சனம்

700 ஆண்டுகளுக்கு முன்பு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக மன்னர்களால் மந்திரவாதிகள் மூலம் உருவாக்கப்பட்ட தீய சக்தி கொண்ட ஆவி தான் ஜின். இதில், நல்ல ஜின்களும் உண்டு. நல்ல ஜின்கள் மன்னர்களின் பாதுகாவலர்களாக இருப்பதோடு போர்களில் அவர்கள் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தன. அதோடு மட்டுமின்றி மக்களுக்கு நல்லதும் செய்து வந்தன. இப்படிப்பட்ட ஜின்கள் தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரிடம் இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஜின் தி பெட்.

மலேசியாவில்
ஒப்பந்த அடிப்படையில் பிரபல ஓட்டலில் இசைக்கச்சேரி நடத்தி வந்த நாயகன் முகேன் ராவ், காண்ட்ராக்ட் முடிந்ததும் தமிழகம் வரவேண்டிய நிர்ப் பந்தம். வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பும் முகேன் ராவ் ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’ என்று மலேசிய மக்களால் அழைக்கப்படும் பேயுடன் ஊருக்கு திரும்புகிறார். அந்தப் பேயை மலேசியாவில் வாங்கியதுமே ரூ. 5 லட்சம் பணப்பரிசு அவரை தேடி வருகிறது. இதனால் அப்போதே அந்த பேயை அதிர்ஷ்ட பேய் என்று நம்புகிறார்.

அதை வீட்டில் தனி அறையில் வைத்து தான் வளர்க்க வேண்டும். அது இருக்கும் பாக்ஸ்க்கு ள் இரவில் மட்டும் பால், பிஸ்கட் வைத்து விட வேண்டும். இப்படி சில கண்டிஷன் களுடன் அந்த ஜின்னை, செல்லப் பிராணி போல வளர்க்கிறார்.
இதே சமயத்தில் தனியார் மருத்துவமனையில் நர்சாக இருக்கும் பெண்ணுடன் காதல், அதே வேகத்தில் திருமணம் நடக்கிறது.

ஜின் வீட்டுக்கு வந்த பிறகு நாயகனுக்கு எல்லாமே நல்லதாய் நடக்க, அதே நேரத்தில் அவர் குடும்பத்திற்கு வேண்டாத சில விஷயங்கள் நடக்கிறது.
இதில் உச்சமாக ஒரு நாள் குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியில் சென்று வீட்டுக்கு வரும்போது முகேனின் மனைவி ரத்த காயங்களுடன் மயக்க நிலையில் கிடக்க, அதற்கு வீட்டில் இருந்த ஜிம் தான் காரணம் என்று மொத்த குடும்பமும் முடிவு செய்ய…

இதனால் ஆத்திரப்படும் நாயகன் ஜின் இருந்த பெட்டியை வீட்டுக்கு வெளியே தூக்கி எறிகிறான்.
இதன் பிறகு ஆறடி உயரத்தில் தன் சுய ரூபத்தில் வெளிப்படும் அந்த ஜின், முகேனிடம் தாக்குதல் சம்பவத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றதோடு, நாயகியின் எதிரிகள் பற்றியும் சொல்லி விட… மனைவியை கொல்ல முயன்ற எதிரிகளை நாயகன் ஜின்னுடன் சேர்ந்து மொத்தமாக களை எடுக்கும் கதை.

மலேசியாவில் இப்போது வரையிலும் கூட சில குடும்பங்கள் இது போன்ற ஜின்களை வீட்டில் செல்லப் வளர்த்து வருவது கதையோடு இணைந்த புதிய செய்தி. நாயகனாக வரும் முகேன் ராவ் அந்த கேரக்டரில் தனது பொருத்தமான தேர்வை நடிப்பில் நிரூபிக்கிறார். நாயகியுடனான காதல் காட்சிகளிலும் தேர்ந்து தெரிகிறார் சண்டைக் காட்சிகளிலும் அவரது பயிற்சி தெரிகிறது.

நாயகியாக வரும் பவ்யா ட்ரிகா நாயகனிடம் காதலில் விழும் இடம் ரசனை மயம். எதிரிகளிடம் சிக்கிக்கொண்ட நிலையில் ஏற்படும் பதட்டத்தை இயல்பாக பிரதிபலித்திருக்கிறார்.நாயகனின் பாட்டியாக வடிவுக்கரசி,அக்காவாக வினோதினி எதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.கௌரவ தோற்ற த்தில் நிழல்கள் ரவி. இமான் அண்ணாச்சியும் பால சரவணனும் சிரிக்க வைக்கிறார்கள் வில்லனாக வரும் ராதாரவி வில்லத்தனத்தில் தனது அனுபவ நடிப்பை பதிவு செய்கிறார்.
அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில் கொடூர ஆவிகள் துரத்தப்படும் அந்த முதல் காட்சியே அட்டகாசம்.

இசையமைப்பாளர்கள் விவேக்- ரம்யா இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை ஓஹோ.எழுதி இயக்கியிருக்கிறார் டி.ஆர்.பாலா, ஜெய்சங்கரின் ‘பட்டணத்தில் பூதம்’ தொடங்கி ஆலம்பனா நான் உங்கள் அடிமை என்று சொல்லும் அசோகன் பூதம் வரை நாம் பார்த்து ரசித்த பூதங்களில் இது சற்றே வித்தியாசம். ஜின்னுக்கு அந்த கீச்சு குரல் செட் ஆகவில்லை.

என்றாலும் குழந்தைகளை கவர வேண்டும் என்ற இயக்குனரின் நோக்கம் வெற்றி
பெற்று இருக்கிறது.
இந்த ஜின் -ஜாலி ஆவி.