திரை விமர்சனம்

ஃபயர் – திரை விமர்சனம்

நல்லவன் போல் நடித்து பெண்களை வேட்டையாடும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவரின் மறுபக்கமே கதை. ஏமாந்த பெண்களின் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் அந்த பிசியோதெரபிஸ்ட் ஒருநாள் திடீரென காணாமல் போகிறார். மகனை காணவில்லை என்று மருத்துவரின் பெற்றோர் போலீசில் புகார் தர, காமுக வேட்டையில் கைதேர்ந்த அந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் என்னவானார் என்பதை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கதைக்காக ஏ சான்றிதழ் வழங்கி இருந்தாலும் கொண்ட கருத்துக்காக நிஜமாகவே இது ‘ஏ ஒன்’ படமாகவும் ஆகி இருக்கிறது

நாகர்கோவிலை சேர்ந்த
பிசியோதெரபிஸ்ட் காசி தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு உதவுவது போல் நடித்து படுக்கையில்வீழ்த்துவதோடு அதை வீடியோவாகவும் எடுத்து கூசாமல் அவர்களிடமிருந்து லட்சங்களை கறக்கிறான். போலீஸ் விசாரணையில் இது தெரிய வரும்போது அவனால் பாதிக்கப்பட்ட யாரேனும் அவன் கதையை முடித்து இருப்பார்களோ என்று போலீஸ் சந்தேகப்படுகிறது அவனிடம் சிக்கி சீரழிந்த பெண்களை தேடிப் பிடித்து விசாரிக்கிறது போலீஸ்.

இந்த நேரத்தில் முதியவர் ஒருவர் தானாக முன்வந்து நான்தான் கொலையாளி என்கிறார். திட காத்திரமான இளைஞன் காசியை அந்த முதிர் வயது பெரியவர் மட்டும் கொன்றிருக்க முடியாது என்று முடிவு செய்யும் போலீஸ், விசாரணையை மேலும் தீவிரமாக்குகிறது. உண்மையில் காசி கிடைத்தானா? அல்லது பெரியவர் சொன்னது போல் அவன் கொல்லப்பட்டானா? என்பதை ஊகிக்க முடியாத திகுதிகுதிருப்பங்களோடு சொல்கிறது இரண்டாம் பகுதி.

போலீஸ் விசாரணையில் படிப்படியாக ஒவ்வொரு முடிச்சும் அவி

ழும் இடங்களில் ரசிகனை சீட் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது திரைக்கதை.
பிசியோதெரபிஸ்ட் காசியாக பாலாஜி முருகதாஸ் பொருத்தமான தேர்வு. தனது கிளினிக் வரும் பெண்களின் பொருளாதார நெருக்கடிகளை தீர்த்து வைப்பதாகட்டும்…அதை வைத்து அவர்களை தனது இச்சைக்கு இணங்க வைப்பதாகட்டும்…இந்த இரு வேறு நிலைகளிலும் நடிப்பில் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.
காசியின் கனிவான பேச்சில் மயங்கி தங்களை இழந்து அப்புறமாய் உண்மை தெரிந்து உடைந்து அழும் பெண்கள் பட்டியல் சாந்தினி, சாக்ஷி அகர்வால், ரக்ஷிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான் என நீள்கிறது
படுக்கை அறை காட்சிகளில் அவர்களின் தாராள பங்களிப்பு ரசிகனின் பெருமூச்சுக்கு உரியது. காசியிடம் சிக்கிக் கொண்ட நாலு பெண்களுமே அவன் எடுத்த ஆபாச வீடியோவால் பதறி துடிக்கும் இடங்களில் நடிப்பிலும் தங்களை நிரூபிக்கிறார்கள் இந்த அழகான ராட்சசிகள்.
எழுதி இயக்கி இருக்கும் ஜே எஸ்.கே. சதீஷ், காசி வழக்கில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வந்து நடிப்பிலும் கலக்குகிறார். விசாரணையின் போது அவரது ஆழமான பார்வையும் பதிலை வரவழைக்க அவரது சைலண்ட் மிரட்டல்களும் காக்கி சட்டைக்கே உரிய கம்பீரம்.
சதீஷ் ஜி யின் ஒளிப்பதிவும் டி.கே. யின் இசையில் பாடல்களும் ரசனை. குறிப்பாக மழையில் நனைந்தபடி ரக்ஷிதா பாடும் ‘மெது மெதுவாய்’ பாட்டு ரசிகனை பயர் ஆக்கி விடுகிறது.
கருணை முகமூடியை போட்டுக் கொண்டு பெண்களை வஞ்சிக்கும் ஆண்களிடம் பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை காட்சிகளாக்கிய இயக்குனர் ஜே.எஸ்.கே. சமூக அக்கறையுடன் இந்தப் படம் மூலம் பெண்களுக்கு முன்எச்சரிக்கை பாடமும் நடத்தி இருக்கிறார்.

காசி என்னவானான் என்கிற அந்த கிளைமாக்ஸ் எதிர்பாராதது.

– பயர், மகளிர் ஸ்பெஷல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *