சினிமா செய்திகள்

UK கிரியேஷன்ஸ் முதல் திரைப்படம் “ஃபேமிலி படம்” வெற்றிகரமாக OTT தளங்களில் ரிலீஸ்!

“UK கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் உருவான முதல் திரைப்படமான **“ஃபேமிலி படம்”**, கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு வெறும் 28 நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைந்து, டிசம்பர் மாதத்தில் தியேட்டரில் வெற்றிகரமாக வெளியானது. திரையரங்குகளில் மக்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த அன்பும் ஆதரவினாலும், திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, **“ஃபேமிலி படம்”** கடந்த **ஜனவரி 15ஆம் தேதி, பொங்கல் நாளில்** பிரபல OTT தளங்களான **“AHA OTT”, “TENTKOTTA OTT”** மற்றும் **“SIMPLY SOUTH OTT”** தளங்களில் வெளியிடப்பட்டது. வெளியீட்டுக்குப் பிறகு தமிழக மக்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகங்களின் அன்பும் பாராட்டும் தொடர்ந்து கிடைத்து வருவதற்கு தயாரிப்பு நிறுவனம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

மேலும், குறுகிய காலத்திலும், சிறிய முதலீட்டிலும், வெற்றிகரமாக தயாரித்து வெளியிட உதவிய இயக்குநர், நடிகர்கள், டெக்னீசியன்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் **“UK கிரியேஷன்ஸ்”** நன்றியை தெரிவித்துள்ளது.

**“UK கிரியேஷன்ஸ்”** அடுத்த திரைப்பட அறிவிப்புடன் விரைவில் திரைப்பிரபலங்களையும் மக்கள் மகிழ்வையும் மீண்டும் சந்திக்கவுள்ளது.