திரை விமர்சனம்

காதலிக்க நேரமில்லை – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் புதுசாக சொல்லப்பட்டிருக்கும் கதை. செயற்கை
கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்ணை புதிய கோணத்தில் நம்மை அணுக வைத்திருக்கும் படம்.
பெங்களூருவில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பணிபுரிகிறான் சித்தார்த்..அவனது காதலி பானு. இவர்களின் காதல் வெறும் வீட்டு பெற்றோரின் அங்கீகாரம் பெற்று நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், திருமணதுக்குப் பின் குழந்தை அவசியமில்லை என்கிறான், சித்தார்த். இது பானுவுக்கு பிடிக்காமல் போக, நிச்சயதார்த்த தினத்தன்று வராமல் இருந்து விடுகிறாள். இதை தனக்கு நேர்ந்த பெரிய அவமானமாக கருதும் சித்தார்த், காதலியுடனான ரிலேஷன்ஷிப்பை
முறிக்கிறான். இந்நிலையில் தன் நண்பனின் வற்புறுத்தலுக்கு இணங்க விந்து தானம் செய்கிறான் சித்தார்த்.
இன்னொரு பக்கம் பதிவுத் திருமணம் செய்து கொண்ட தனது கணவரை இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக பார்த்த ஸ்ரேயா கணவனை அடியோடு தலை
முழுகுகிறாள்.
இதற்கிடையே குழந்தை மீதான கனவில் இருந்த ஸ்ரேயா, கணவன் தேவைப்படாமலேசெயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறாள். மருத்துவமனையில் அவளுக்கு செலுத்தப்படுவது சித்தார்த்தின் உயிரணு.
கரு உருவாகிறது.
மகன் பிறக்கிறான். வேலை விஷயமாக பெங்களூரில் செட்டில் ஆகும் ஸ்ரேயாவுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்செயலாக முன்னாள் நண்பன் சித்தார்த்தின் நட்பு கிடைக்கிறது. தன் மகன் என்று தெரியாமலே சித்தார்த்தும் அந்த சிறுவன் மீது அன்பு பாராட்டுகிறான். அப்பா யார் என்று கேட்டு சக மாணவர்கள் பள்ளியில் செய்த டார்ச்சரால் நொந்து போயிருந்த அந்த சிறுவன் இப்போது சித்தார்த்தை தனது அப்பா இடத்தில் வைத்துப் பார்க்கிறான்.
மகன் ஏற்றுக் கொண்டதால் ஒரு கட்டத்தில் ஸ்ரேயாவும் சித்தார்த்தை வாழ்க்கைத் துணையாக ஏற்கும் முடிவுக்கு வருகிறாள்.
இப்போது சித்தார்த்தின் பழைய காதலி பானு அங்கு வந்து நின்றதோடு தனது பழைய காதலை புதுப்பிக்க
முயல…
இது தெரிந்து ஸ்ரேயா அவனை விட்டு விலக முடிவு செய்கிறாள்…
இப்போது நாயகன் சித்தார்த் முன்னாள் காதலியா? பாசம் காட்டும் குழந்தையின் அப்பாவா? எந்த முடிவை எடுக்கிறான் என்பது கிளைமாக்ஸ்.
நாயகனாக ரவி மோகன் ( ஜெயம் ரவி தான். இந்த படத்தில் இருந்து தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.) வித்தியாசமான அந்த கேரக்டரில் தன்னை முழுக்கவே ஐக்கிய படுத்திக் கொண்டிருக்கிறார்.
கல்யாணம் ஆனால் குழந்தை ஒரு தொல்லை என்று அதுவரை எண்ணிய வரை அவரது விந்து தானம் மூலம் பிறந்த மகனே மடைமாற்றும் காட்சி ஜீவனானது.
நாயகனை விடவும் ஒரு படி மேலான கதாபாத்திரம் நாயகிக்கு. அந்த ஸ்ரேயா கேரக்டரில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து இருக்கிறார், நித்யா மேனன். பெற்றோரிடம் தன் கரப்பத்தை சொல்லும் இடத்திலும், நாயகனின் காதலி மறுபடி வந்த பிறகு அவனை விட்டு விலக முடிவு செய்யும் இடத்திலும் நடிப்பில் புது பரிமாணம்.
நாயகனின் காதலியாக வந்து போகும் வேடம் டி.ஜே. பானுவுக்கு. காதலன் மாறி விட்டான் என்று தெரிந்த இடத்தில் அவர் எடுக்கும் முடிவின் போது ஏமாற்றத்தை பிரதிபலிக்கும் அவர் முக பாவம் ஆஸம்.
நாயகனின் நண்பர்களாக வினய், யோகிபாபு. வினய்க்கு போதிய வாய்ப்பில்லை.
அந்த சிங்கிள் அப்பா கேரக்டரில் பிரகாசிக்கிறார், லால். பாடகர் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி தங்கள் கேரக்டர்களுக்கு நடிப்பில் சிறப்பு சேர்க்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்தின் இன்னொரு பிளஸ்.
ஜென்z எனப்படும் கதைக்களத்தை இளைய தலைமுறையை
ஈர்க்கும் நோக்கில்
இயக்கி இருக்கிறார் கிருத்திகா உதயநிதி. தமிழில் இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்ட விதத்திலும் நம்பிக்கை இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறார் வருகிறார்gay parenting குறித்து பேசி இருப்பது அவரை சினிமாவின் அடுத்த கட்ட இயக்குனர் ஆக்கியிருக்கிறது. குழந்தைக்கு தந்தை அடையாளம் எத்தனை முக்கியம் என்பதை காட்சிப்படுத்திய விதத்திலும் தேர்ந்த இயக்கம்.
காதலிக்க நேரமில்லை படம் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு இயக்குனர் எடுத்திருப்பது புதிய பாடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *