எக்ஸ்ட்ரீம் திரை விமர்சனம்
கட்டுமான பணி நடக்கும் கட்டிடம் ஒன்றில் இளம் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கிடைக்கிறது. போலீஸ் விசாரணையில் அது இளம்பெண் அபி நட்சத்திரா என்பதும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதும் பரிசோதனையில் தெரிய வர…
கொலைக்கான பின்னணி என்ன? மலையாளி ஒருவரா, பலரா? என்பதை தொடக்கம் முதல் முடிவு வரை திரில்லர் பின்னணியில் தந்து இருக்கிறார்கள். இந்த கிரைம் கதைக்குள் ஒரு மகிழ்ச்சியான குடும்ப பின்னணியை இணைத்து இருப்பது படத்தை ரசிகனோடு இணைத்துக் கொள்கிறது.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக ரக்ஷிதா மகாலட்சுமி தோற்றத்திலும் கம்பீரம். நடிப்பிலும் கம்பீரம். கொலை வழக்கை விசாரிக்கும் இடங்களிலும் நிஜ போலீசாகவே அவரை உணர முடிகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ராஜ்குமார் நாகராஜ் தனக்கு நேர்ந்த கடும் இழப்பிலும் கொலையாளிகளை விசாரிக்க நேரும் இடங்களில் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். இவருக்கும் மனைவிக்குமான பிரிவு எத்தனை வலி நிறைந்தது எந்த என்பதை விவரிக்கும் அந்த பிளாஷ் பேக் காட்சியில் வலி நிறைந்த ஒரு அப்பாவை நம் கண் முன் நடிப்பில் நிறுத்தி விடுகிறார்.
நாகரீகம் என்ற பெயரில் கண் கூச வைக்கும் ஆடைகளை உடுத்தும் பெண்ணாக காட்சிகளில் கவர்ச்சி ததும்ப வந்து போகிறார் அம்ரிதா ஹில்டர். இவரது நடிப்புக்கான இடங்கள் அதிகம் இல்லை என்றாலும், தன்னால் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதை உணர்ந்து கலங்கும் இடத்தில் அம்மணிக்கு கொஞ்சம் நடிப்பும் வருகிறது.