சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜா இசையில் யோகிபாபு நடிக்கும் ” ஸ்கூல் ” R. K. வித்யாதரன் இயக்குகிறார்.

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்திருக்கும் படம் ” ஸ்கூல் “

இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஸ்கூல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ்.
எடிட்டிங் : ராகவ் அர்ஸ்
கலை : ஶ்ரீதர்
ஸ்கிரிப்ட் கன்சல்ட்ண்ட் : V. நிவேதா
விளம்பர வடிவமைப்பு : சதீஷ் J
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
இணை தயாரிப்பு : K. மஞ்சு
தயாரிப்பு : Quantum Film Factory R.K.வித்யாதரன்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் R.K. வித்யாதரன்.

படம் பற்றி இயக்குனர் R.K.வித்யாதரன் பேசியதாவது…

இது ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம்.

அதே நேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்கிறோம்.

மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும் மாணவர்களை எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், ஸ்கூலில் நடக்கும் க்ரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கே எஸ் ரவிக்குமாரும் principal ஆக பாக்ஸும் சாம்சும் நடித்திருக்கிறார்கள்.

கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான பாடமாக உருவாக்கி இருக்கிறோம்.

இசைஞானி இளையராஜா சார் இந்த படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டுதான் இசையமைக்க சம்மதித்தார், அவரே மூன்று பாடல்களையும் எழுதி இசையமைத்திருப்பது எங்கள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்றே சொல்லாம்.

அந்த மூன்று பாடல்களும் அருமையாக வந்துள்ளது. விடுதலை 2 படத்திற்கு பிறகு அவர் இசையமையத்திற்கும் படம் இது என்பதால் பாடல்கள் நிச்சயம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குனர் R.K.வித்யாதரன்.

கன்னட திரை உலகில் உபேந்திரா வைத்து கனவில் நடக்கும் சம்பவங்களை Thriller-ஆக ” News ” திரைப்படத்திலும், வைத்தீஸ்வரன் திரைப்படத்தில் மறுஜன்மத்தை பற்றி ஆராயும் விதமாக சொல்லியது போல் இந்தப் படத்தில் சமூக நம்பிக்கைகளையும் ஆவிகள் உலகத்தில் நடக்கும் மன மாற்றங்களை பற்றி சொல்லவிருக்கிறார் இயக்குனர் R.K. வித்யாதரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *