பாடிகிராஃப்ட் கிளினிக் & சலோன் – சென்னையின் வெப்பம் மற்றும் தூசியை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த தீர்வு!
பிரபலங்களின் ஸ்டைலிஷ் லுக் சாதாரண மக்கள் கொண்டு வர இயலாது என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. மாறிவரும் காலத்திற்கேற்ப குறிப்பாக சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு தனிநபரும் ஒரு பிரபலமாக மாறுவதற்கான வாய்ப்பு இங்கு கொட்டிக் கிடக்கிறது. ஆடம்பரமான சலூன்கள் மற்றும் அழகுசாதனங்கள் ஒரு காலத்தில் தனிநபர்களுக்கு எட்டாதவையாகக் கருதப்பட்டன. இதற்கெல்லாம் தீர்வாக சென்னையில் தொடங்கப்படும் பாடிகிராஃப்ட் கிளினிக் & சலோன் உள்ளது. இந்த நகரத்தில் உங்கள் அழகு அனுபவத்தை மேம்படுத்த பாடிகிராஃப்ட் தயாராக உள்ளது. எனவே இந்த நகரத்தின் கடும் வெப்பம் மற்றும் தூசியை எதிர்த்துப் போராடுவதற்கான உயர்தர சிகிச்சைகள் மற்றும் தீர்வுகளில் ஈடுபடுவதற்குத் தயாராக வேண்டிய நேரம் இது.
இதன் பிசினஸ் தலைவர் சித்தார்ட் நாயர், “பல்வேறு துறைகளின் கனவுகள் மற்றும் சாதனைகளின் பூமியாக சென்னை விளங்குகிறது. முறையான கண்காணிப்பு மற்றும் அனுபவத்தின் கீழ் தங்களது தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான வரப்பிரசாதம் இது. இதற்காகவே, பாடிகிராஃபிட்டில் நாங்கள் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் திறமையான பணியாளர்களைக் கொண்டுள்ளோம். அவர்கள் தோற்றத்தை மேம்படுத்துவதிலும், முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை முழுமையுடன் மேம்படுத்துவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள். சென்னை எங்களுக்கு ஒரு சிறப்பு அடையாளமாக இருக்கப் போகிறது. மேலும் பல ஆர்வமுள்ள ஒப்பனையாளர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்களுக்கு நாங்கள் வேலை வாய்ப்புகளைத் தர இருக்கிறோம்.
பாடிகிராஃப்ட் கிளினிக் & சலோன் பற்றி:
இந்தியாவின் முன்னணி அழகு நிறுவனமான பாடிகிராஃப்ட் கிளினிக் & சலூன் சென்னையில் தனது முதல் கிளையைத் திறந்துள்ளது. 2900 சதுர அடி பரப்பளவில், நவீன வசதியுடன் சென்னையின் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தரமான சேவைகளுடன் அங்கீகரிக்கப்பட்ட தோல் மற்றும் முடி சிகிச்சைகளை வழங்குகிறது.
1997 இல் திருமதி மஞ்சுல் குப்தாவால் நிறுவப்பட்ட பாடிகிராஃப்ட், இந்தியா முழுவதும் விரிவடைந்துள்ளது. இது உலகளாவிய தரமான ஆரோக்கிய தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னையில் இந்த பிராண்ட் திறக்கப்பட்டது. இந்த பிராண்டின் வளர்ச்சியையும், அப்பகுதியில் உயர்தர சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையையும் பிரதிபலிக்கிறது. ஒரு விரிவான சீர்ப்படுத்தும் மெனு, பல்வேறு முடி வண்ண விருப்பங்கள் மற்றும் 3TenX மற்றும் OLAPLEX போன்ற மேம்பட்ட முடி சிகிச்சைகள் தரமானதாக இங்கு இருக்கும் என்று திருமதி குப்தா வலியுறுத்துகிறார்.
இங்கு செலேட்டிங் ஓலப்ளெக்ஸ் ஹேர் ட்ரீட்மென்ட் மற்றும் பிரத்யேக ஃபேஷியல் உள்ளிட்ட அதிநவீன சேவைகள் உள்ளன. புகழ்பெற்ற நிறுவனங்களில் பயிற்சி பெற்ற இந்த நிபுணர் குழு சர்வதேச நுட்பங்களை உள்ளூர் தேவைகளுக்கேற்ப இணைக்கிறது. கூடுதலாக, பாடி கண்ட்டூரிங், எடை குறைப்பு சிகிச்சைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக புதுமையான ஐவி வெல்னஸ் ட்ரிப்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது. பிசினஸ் ஹெட் திரு. சித்தார்ட் நாயர், சென்னைக்கு பாடிகிராஃப்டின் நிபுணத்துவத்தை அறிமுகப்படுத்தி அழகு மற்றும் ஆரோக்கியத் தேவைகளுக்குச் செல்ல வேண்டிய இடமாக இதை உற்சாகமாக அறிமுகப்படுத்துகிறார்.