திரை விமர்சனம்

நயன்தாரா பியாண்ட் தி பேரிடேல் — ஆவணப்பட விமர்சனம்

நடிகை நயன்தாரா நடிக்க வந்தது தொடங்கி லேடி சூப்பர் ஸ்டாராக தன்னை வளர்த்துக் கொண்டது வரை இந்த ஆவணப் படம் கண்முன்விரிகிறது. முத்தாய்ப்பாக பிரமாண்டமாக நடந்த அவரது திருமணத்தையும் திகட்ட திகட்ட காட்டுகிறார்கள்.
கேரளாவில் திருவல்லா என்ற சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் டயானா. அப்பா பெயர் குரியன் என்பதால் டயானா
குரியன். கல்லூரியில் படிக்க வாய்ப்பு வந்த போது சிஏ படிக்க விரும்பினார். அதற்காக விண்ணப்பித்து காத்திருந்த நேரத்தில் தேடி வந்தது சினிமா வாய்ப்பு. 2003 ஆம் ஆண்டு சத்யன் அந்திக்கரே இயக்கத்தில் உருவான உருவான ‘மனசுக்கிரே’ தான் நயன்தாராவின் முதல் படம். படத்தில் அவருக்கு ஜோடி ஜெயராம். இந்த படத்தில் நடித்த போதுதான் டயானா என்ற அவரது பெயரை நயன்தாராவாக மாற்றினார் டைரக்டர்.

இப்படி அவர் நடிக்க வந்த காலம் தொடங்கி விக்னேஷ் சிவனுடனான அவரது காதல் காட் சிப்படுத்தி இருக்கிறது இந்த ஆவணம்.தமிழில் சரத்குமாருடன் ஐயா படம் தொடங்கி தொடர்ந்து 21 ஆண்டு காலம் அதன் நடிப்புக்கொடியை உயர பிடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நயன்தாரா.

இந்த ஆவணத்தில் நயன்தாரா இயக்குனர்கள்சத்யன் அந்திக்காடு பாசில் அட்லி, நடிகர்கள் விஜய் சேதுபதி, ராணா, நாகர்ஜுனா, உபேந்திரா, நடிகைகள் ராதிகா, தமன்னா பார்வதி உள்ளிட்டோர் நல்லவிதமாக நயன் பற்றி சொல்ல, அவ்வப்போது நயன்தாரா நடித்த பட காட்சிகளும் திரையில் வந்து போகிறது.

இடையிடையே நயன்தாரா பேசும்போது தனது முந்தைய காதல் கொடுத்து குறித்தே பலரும் கேட்பதாக ஆதங்கப்பட்டார். சம்பந்தப்பட்டவரிடம் இது பற்றி கேட்டீர்களா என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை என்பதை சற்று ஆதங்கமாகவே தெரிவித்தார். ஒரு கால கட்டத்தில் தன்னை திரையிலிருந்து அப்புறப்படுத்தவும் முயற்சி நடந்தது என்றும் சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தினார். ஆனால் அதையெல்லாம் தாண்டி தான் இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக சிகரத்தின் உச்சத்தில் நிற்கிறார் நயன்தாரா.

ஆவணத்தில் இடையிடையே விக்னேஷ் சிவன் தன் பங்குக்கு விஷயம் பகிர்ந்து கொள்கிறார். பிரமாண்டமாக நடந்த தங்கள் திருமணம் பற்றி அவர் கூறும் போது என் வாழ்நாளில் அப்படி ஒரு படம் திருமணத்துக்கு நான் போடவே இல்லை ஆமா அதே பிரம்மாண்டம் அது என் திருமணம் என்பது எனக்கு நம்ப முடியாத சர்ப்ரைஸ் அப்படி ஒரு பிரம்மாண்டம் லேடி சூப்பர்ஸ்டாருடன் என்பது என் வாழ்வின் ஆனந்தம் பேரின்பம் என்கிறார்.

நயன்தாராவுடன் ஜோடியாக நடித் திருந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் தேடிப் பிடித்தாவது இந்த ஆவணத்தில் பங்கேற்க, இயக்கிய கௌதம்மேனன் முயற்சி மேற்கொண்டிருக்கலாம்.

ஒரு மணி 21 நிமிடம் கொண்ட இந்த ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *