GOAT தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – விமர்சனம் 3.75/5
கதை…
விஜய்யின் மனைவி சினேகா.. இவர்களுக்கு ஒரு மகன்.. சினேகா 2வது குழந்தைக்காக கர்ப்பிணியாக காத்திருக்கிறார். பிரசாந்த் மனைவி லைலா.. இவர்களுக்கு ஒரு மகள்..
விஜய் பிரசாந்த் பிரபுதேவா அஜய் இவர்களின் நால்வரும் ஜெயராம் தலைமையில் கீழ் ஆன்டி டெரரிசம் ஸ்குவாட் ஆக பணி புரிகின்றனர்.
ஒரு நாட்டிற்கு ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதியையும் பிடிக்க SAT squad டீம் களம் இறங்குகிறது. அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுகிறார்.
இந்த சூழ்நிலையில் தனது 2வது ஹனிமூனுக்காக சினேகா மற்றும் தனது மகனுடன் தாய்லாந்த் செல்கிறார் விஜய்.. அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனை சமயத்தில் தன் மகனை தொலைத்து விடுகிறார்.. இதனை எடுத்து விஜய்யை பிரியும் சினேகா 15 ஆண்டுகளாக தன் மகளை மட்டும் வளர்த்து வருகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? மகனை கடத்தி சென்றவர் யார்.? அவரின் நோக்கம் என்ன? விஜய் சினேகா மீண்டும் இணைந்து வாழ்ந்தார்களா?+காணாமல் போன மகன் கிடைத்தாரா? என்பது தான் மீதிக்கதை.
நடிகர்கள்…
பொதுவாக விஜய் படங்களில் தன் ஒட்டுமொத்த படத்தையும் அவரே தாங்கி நிற்பார்.. இதில் இரண்டு விஜய் என்பதால் இரண்டிலும் செஞ்சுூரி எடுத்திருக்கிறார் தளபதி விஜய்.. விஜய்க்கு ஏற்றவாறு பாட்டு பைட்டு கிரிக்கெட் என அனைத்தையும் வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.. ஹீரோவும் விஜய் வில்லனும் விஜய் என இருவருக்கான திரைக்கதையை அமைத்து விளையாடி இருக்கிறார் வெங்கட் பிரபு.
சினேகா லைலா மீனாக்ஷி என அவரவருக்கான பாத்திரங்களில் அவர்கள் பளிச்சிடுகின்றனர்.. அந்தகன் படத்திற்கு பிறகு இந்த படத்திலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் பிரசாந்த்.. நண்பர் கலாட்டா மகள் பாசம் என வெரைட்டி காட்டி இருக்கிறாளர் பிரசாந்த்.
பிரபுதேவா கேரக்டர் மூலம் படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.. நல்லவேளை இவருக்கும் ஜோடி வைத்து கதையை நீட்டவில்லை..
ஹரா படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்த மோகன் இந்த படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.. இரண்டாம் பாதியில் அவரது ஹேர் ஸ்டைலும் வெள்ளை தாடியும் ரசிக்க வைக்கிறது..
ஜெயராம் வழக்கப் போல தன்னுடைய அனுபவ நடிப்பில் ஜொலிக்கிறார்.. கலகலப்புக்காக யோகி பாபு கேரக்டர் இணைக்கப்பட்டாலும் அவரும் தன் கதையுடன் ஒன்றிய பாத்திரத்தை செய்திருப்பது சிறப்பு.
இவர்களுடன் வெங்கட் பிரபுவின் கம்பெனி ஆர்டிஸ்ட் பலரும் இணைந்துள்ளனர்
சிறப்பு தோற்றங்கள்…
கேப்டன் விஜயாந்த் (AI)
த்ரிஷா
சிவகார்த்திகேயன்
மகேந்திர சிங் தோனி
ஆகியோருக்கு கெஸ்ட் ரோல் கொடுத்து படத்தை இன்னும் கலகலப்பு ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.. விஜயகாந்துக்கு ஆக்சன் சிவகார்த்திகேயனுக்கு சிரிப்பும் கொடுத்திருக்கிறார்… விஜய்யுடன் இணைந்து ரசிகர்களை கிறங்கடிக்கும் ஆட்டத்தை போட்டு சென்றுவிட்டார் திரிஷா.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
படத்தின் கதை பழக்கப்பட்ட கதை தான்.. தந்தை மகன் மோதல் தந்தையை பழிவாங்க மகன் எடுக்கும் அவதாரம் என பழைய கதையை கொடுத்து இருந்தாலும் அதை மேக்கிங் மூலம் சிறப்பாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அது மட்டுமில்லாமல் அவருக்கு பிடித்தமான கிரிக்கெட்டை இணைத்து கிளைமாக்ஸ் காட்சிகள் சிக்சர் அடித்திருக்கிறார்.
யுவன் இசையில் விஜய் பிரசாந்த் பிரபுதேவா அஜய் இணைந்து போடும் ஆட்டம் வேற லெவல் ரகம்.
இளையராஜா பாட்டு.. ரஜினி பாட்டு.. கமல் பாட்டு.. அஜித் தீம் மியூசிக் என அனைத்தையும் கலந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.. இதனால் பஞ்சமில்லாத குஷி கிடைத்திருக்கிறது
பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.. பாடல்களில் கூடுதல் கவனம் கொடுத்து இருக்கலாம்.. ரசிகர்களுக்கு ஏற்ற வகையான பாடலாக இருந்தாலும் நீண்ட காலத்திற்கு இந்த பாடல் நிற்காது என்பதே உண்மை.
ரயில் மீது ஹெலிகாப்டர் நிற்பது.. மெட்ரோ ரயிலை உடைத்துக் கொண்டு விஜய் பறப்பது போன்ற காட்சிகளில் லாஜிக் இல்லாவிட்டாலும் படத்தின் மேக்கிங் பாராட்டும்படியாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் : சித்தார்தா நோனி
படத்தொகுப்பாளர் : வெங்கட் ராஜன்
கலை இயக்குனர் : ராஜீவன்
படத்தின் ஒளிப்பதிவாளர் எடிட்டர் ஆர்ட் டைரக்டர் மூவரையும் நிச்சயம் பாராட்டிய ஆக வேண்டும்.. மூன்று மணி நேரம் படம் என்றாலும் அதற்கு ஏற்ப உழைப்பை கொடுத்து போர் அடிக்காமல் படத்தை நகர்த்த இவர்கள் உதவி இருக்கின்றனர்..
ஆக ரசிகர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி விருந்து படைத்திருக்கிறார் டைரக்டர் வெங்கட் பிரபு.