திரை விமர்சனம்

கொட்டுக்காளி விமர்சனம் 2.5/5.. கொட்டினால் காலி!!

கதை…

தன் உறவுக்கார பெண்ணை கட்டிக்கொள்ள நினைக்கிறார் சூரி.. ஆனால் அவளுக்கு வேறு ஒருவருடன் காதல் இருப்பதால் அவளை தன் உறவினர் உதவி மூலம் பிரிக்க நினைக்கிறார்.

முறைப்பெண்ணின் காதலன் அவளை சூனியம் வைத்து வசியம் செய்து விட்டதாக என நினைக்கும் உறவினர்கள் ஒரு சாமியாரிடம் கொண்டு அந்த சூனியத்தை எடுதக்க நினைக்கின்றனர்.. அதற்காக ஆட்டோ மற்றும் டூவீலரில் செல்கின்றனர்.

அவர்கள் வழியில் செல்லும் போது நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் கதை.

சூனியம் சாமியாரால் எடுக்கப்பட்டதா.? முறை பெண்ணை மணந்தாரா சூரி?என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..

நடிகர்கள்…

சூரி மற்றும் அன்னா பென் இருவர் மட்டுமே தெரிந்த முகங்கள்.. அன்னா பென் இந்த படத்தின் மூலம் தமிழுக்கும் வந்துள்ளார்.. கொடுத்த பாத்திரத்தை வசனங்கள் கூட இல்லாமல் நிறைவு செய்து இருக்கிறார் நாயகி..

விடுதலை கருடன் வெற்றிக்குப் பிறகு சூரியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.. இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் பெயரைத் தட்டி செல்கிறார் மற்ற காட்சியில் ஒரே ரியாக்ஷன் கொடுத்து செல்கிறார்.

சூரியன் உறவினர்கள் சிலர் ரசிக்க வைக்கின்றனர்.. மலம் கழிக்க கேட்கும் சிறுவன்.. காளை ஓட்டும் சிறுமி.. மதுக்கடையை தேடி செல்லும் உறவினர்.. சிறுநீர் கழிக்க தேடிச் செல்லும் நபர்.. இப்படியாக படத்தை நீட்டி நீட்டி நீட்டி நம்மை சோதித்து விட்டார் இயக்குனர் வினோத் ராஜ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பல விருதைகளை அள்ளிய கூழாங்கல் படுத்த இயக்கிய வினோத் ராஜ் தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். முதல் படத்தை நயன்தாரா வெளியிட்டிருந்தார்.. இந்த கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்..

ஒரு குறும்படம் ஒரு ஆவணப்படம் அதற்கான கால அளவை மட்டுமே இயக்குனர் எடுத்திருந்தால் இந்த படம் தியேட்டருக்கு வந்து இருக்காது.. 30 நிமிட குறும்படத்தை 100 நிமிடங்கள் ஓட்டி இருக்கிறார் வினோத் ராஜ்..

ஒரு சேவல் கோழியை வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் அதை வைத்து ஏதோ சொல்ல போகிறார் என்று நாம் ஒவ்வொரு நிமிடமும் காத்திருந்தால் அதில் ஒன்றுமே இல்லாமல் வெட்டி சாய்த்து இருக்கிறார்.. இதில் வேறு சேவலுக்கு தண்ணீர் ஊற்றி தண்ணீர் காட்டி அதை தெளிய வைத்து நம்மை திணறடித்து விட்டார் வினோத் ராஜ்.

சூனியம் எடுக்கும் போலி சாமியார்களை இந்த படத்தின் மூலம் காட்ட நினைக்கிறார்.. ஆனால் கதை எந்த புள்ளியில் ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான தீர்வு இந்த படத்தில் சொல்லப்படவில்லை..