திரை விமர்சனம்

BOAT போட் விமர்சனம் 3/5.. நடுக்கடலில் பயணம்

கதை…

1943 ஆண்டு.. இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டம் அது.. அப்போது சென்னை மீது ஜப்பான் நாட்டு அரசு குண்டு போட திட்டமிட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் குண்டுகளிடமிருந்து தங்கள் உயிரைப் பாதுகாக்கவும் யோகி பாபு தன் அம்மா லீலா உடன் தன்னுடைய சொந்த படகில் நடுகடலுக்கு செல்ல திட்டமிடுகிறார்.

அவர் செல்லும் போது திடீரென கௌரி அவரின் தந்தை சின்னி ஜெயந்த், எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், ஷாரா, மதுமிதா, அக்க்ஷத் உள்ளிட்டோரும் படகில் ஏறி விடுகின்றனர்.

இந்தப் படகில் 7 நபருக்கு மேல் செல்ல முடியாது என யோகி பாபு எச்சரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வேறொரு படகில் பயணம் செய்து கொண்டிருந்த ஆங்கிலேயன் (அவரின் படகு விபத்துக்குள்ளானதில்) ஜெஸ்ஸி இவர்களை மிரட்டி இந்த படகில் ஏறி கொள்கிறான்.

இந்த சூழ்நிலையில் ஆங்கிலேயன் ஜெஸ்ஸிக்கு ஒரு தகவல் வருகிறது.. நீங்கள் பயணம் செல்லும் படகில் ஒரு தீவிரவாதி இருக்கிறான் என தகவல் வருகிறது.

யோகி பாபு படகில் ஏறிய அந்த தீவிரவாதி யார்? படகில் இருந்தவர்களை அவன் என்ன செய்தான்? என்பதுதான் மீதிக்கதை.

மேலும் படகில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற சூழ்நிலையில் 9 பேர் பயணம் செய்வதால் யோகி பாபு என்ன செய்தார்? என்பதும் கதையாக தொடர்கிறது.

படகோட்டியாக வரும் யோகி பாபு பல இடங்களில் கண்கலங்கவும் வைக்கிறார் அதே சமயம் சிரிக்கவும் வைக்கிறார்.. இவரின் அம்மாவாக நடித்த கொளப்புள்ளி லீலாவும் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்..

சின்னி ஜெயந்த், எம் எஸ் பாஸ்கர், கௌரி, சாம்ஸ், சாரா, மதுமிதா, லெஸ்ஸி ஆகிய கதாபாத்திரங்கள் படத்திற்கு பலம்.. எல்லாம் கதாபாத்திரங்களும் படம் முழுக்க வருவதால் அனைவரும் தங்களது கேரக்டர் தன்மையை உணர்ந்து நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

முக்கியமாக யோகி பாபு கௌரி கொஞ்ச நேர ரொமான்ஸ் ரசிக்க வைக்கிறது..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

முழுக்க முழுக்க முழுப்படத்தையும் நடுக்கடலில் வைத்து ஒரு படகில் முழு படத்தையும் முடித்து இருப்பதற்காகவே இயக்குனர் சிம்பு தேவனை பாராட்டலாம்.. தீவிரவாதி யார்? என்ற தேடுதலிலே இடைவேளை வரை படம் தொடர்கிறது. அதன் பிறகு பல திருப்புமுனை காட்சிகள் இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் எவரும் எதிர்பாராத வகையில் சென்டிமென்ட் காட்சியை வைத்திருக்கிறார்.

படகில் இருந்து இருவர் இறங்க வேண்டும் என்ற சூழ்நிலையில் எல்லோருக்கும் அவரவர் உயிர் முக்கியம்.. அப்படியானால் இறங்கப் போகும் அந்த இருவர் யார் என்ற என்ற கேள்வியோடு திரைக்கதையை நீட்டி அமைத்து நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கிறார் டைரக்டர்..

1943-ஆம் ஆண்டில் கானா பாடல் இருந்ததா என்பது தெரியாது.. ஆனால் கானா பாடலையும் கர்நாடக சங்கீதத்தையும் சேர்த்து ஜிப்ரான் இசையமைத்து பாடல் வரிகள் அமைத்து இருப்பது சிறப்பு..

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கடல் அலை போல அழகோ அழகு.. பல காட்சிகள் இயற்கை கலந்த ரம்ய படைப்பாக இருக்கிறது.. பறவைகள் பறக்கும் காட்சி திருக்கை மீன்கள் நீந்தும் காட்சி.. திமிங்கலம் திமிரும் காட்சி என அனைத்தும் அழகு.. பல இடங்களில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவை படத்துடன் ஒன்றி இருப்பது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *