கல்கி 2898 AD விமர்சனம்.. பிரம்மாண்டம்

திரை விமர்சனம்

மகாபாரத போர் நடந்த காலம்.. போர் முடிகிறது.. இதில் துரோணாச்சார்யா மகன் அஸ்வத்தாமன் (அமிதாப்பச்சன்) பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள குழந்தையை அழிக்கிறான். அந்த குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான்.

இதனை கண்ட கிருஷ்ணர், அஸ்வத்தாமனுக்கு சாகா வரம் அளிக்கிறார். அந்த குழந்தையாக தானே பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மண்ணில் அவதரிப்பேன். அப்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அது வரை, இந்த பூமியில் கலியுகத்தில் நீ வேதனையோடு வாழனும் என்று சாபம் கொடுத்து சென்று விடுகிறார்.

பின்னர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கதை நகர்கிறது.. அங்கு சுப்ரீம் யாஸ்கின் பெரிய காம்ப்ளக்சை நிறுவி பிரம்மாண்ட தனி உலகம் நடத்தி, அதில் பல கர்ப்பிணி பெண்களை உருவாக்கி, அவர்களிடம் இருந்து சீரத்தை எடுத்து கொண்டு இருக்கிறார். (அவர்தான் கமல்ஹாசன்)

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் விடுதலைக்காக காம்ப்ளக்சிற்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறது ஷம்பாலா கும்பல்.

ஒரு சூழ்நிலையில் இந்த ஷம்பாலா கும்பலிடம் வந்து தஞ்சம் அடைகிறார் கர்ப்பிணி பெண் தீபிகா படுகோனே.. வயிற்றில் இருக்கும் அந்த குழந்தை சாதாரண குழந்தை அல்ல.. அது ஒரு கடவுள் குழந்தை அதுவே கடவுள்..

அதன் பின்னர் என்ன ஆனது என்பதே கல்கி படத்தின் மீதிக்கதை.. இதில் பிரபாஸ் யார் அவருக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் படத்தின் கிளைமாக்ஸ்..

படத்தின் நாயகன் பிரபாஸ்.. ஆனால் படத்தில் அவரை விட அதிகமாகவே ஸ்கோர் செய்பவர் அமிதாப்பச்சன் தான்.. அவர் ஏற்றிருக்கும் அந்த வேடத்திற்கு மிகவும் 100% பொருந்தி போகிறார் இந்த அசுவத்தாமன்..

பிறக்காத ஒரு குழந்தைக்காக எப்போது பிறக்கும் என்று தெரியாத ஒரு குழந்தைக்காக அவர் பல வருடங்கள் காத்திருந்து அந்த குழந்தையை காக்க போராடும் அந்த போராட்டம் படத்தின் ஹைலைட்.. அமிதாப்பும் பிரபாஷும் மோதும் சண்டை காட்சிகள் நிச்சயம் ஆக்சன் ரசிகர்களுக்கு அதிரடி விருந்து..

பிரபாஸ் ஆக்ஷன் காட்சிகளில் ஜொலிக்கிறார். இடைவேளைக்கு முன்பு வரை அவரது காட்சிகள் வீணடிக்கப்பட்டு இருக்கிறது.. இரண்டாம் பாதியில் அதை சரி செய்து இருக்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சிகள் இவரது பிளாஷ்பேக் கேரக்டர் நிற்கும்.

கர்ப்பிணி பெண்ணாக தீபிகா படுகோன்.. இவரது நடிப்பு எமோஷன் ஆக இருக்கிறது அதேபோல மற்றொரு நாயகி மிருனாள் தாக்கூர சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். இவர்களுடன் முன்னாள் நாயகி ஷோபனாவும் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்..

கர்ப்பிணி தீபிகாவை காப்பாற்ற போராடும் அண்ணாபென், பசுபதி என அனைவரும் நிறைவான நடிப்பு…

இயக்குனர் ராஜமவுலி ஒரு சிறிய வேடத்தில் வந்து செல்கிறார். அர்ஜுனனாக விஜய் தேவரகொண்டா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்… கர்ணன் வேடத்தில் வந்தவர் யார் என்பதுதான் படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்..

கிருஷ்ணராக நடித்தவர் யார் அவர் எப்போது திரையில் தோன்றுவார்.. அவரது முகம் எப்போது காட்டப்படும் என்பதெல்லாம் கல்கி படத்தில் இரண்டாம் பாகத்தில் தான் தெரிய வரும்..

எல்லாரையும் சொல்லிட்டீங்க கமல்ஹாசன் எங்கே? என்று கேள்வி எழும்..அவர் இந்த படத்தில் கிளைமாக்ஸ் கட்சியில் ஒரு நிமிடம் வந்து செல்கிறார். மீதி காட்சிகள் எல்லாம் கல்கி படத்தில் இரண்டாம் பாகத்தில் வரும் என நம்பலாம்..

இடைவேளைக்கு முன்பு வரை படம் மிக மெதுவாக செல்கிறது இடைவேளை வரும்போதுதான் படம் சூடி பிடிக்க ஆரம்பிக்கிறது அது தொடங்கி கிளைமாக்ஸ் வரை படத்தின் வேகம் அதிகரிக்கிறது..

இடைவேளைக்கு முன்பு வரை சீரியஸாக செல்லும் படத்தில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சுரேஷின் குரல்கள் படத்தில் சிரிப்பை வர வைக்கிறது.. படத்தின் நீளம் கருதி வெட்டி எறிந்து இருக்கலாம்..

புஜ்ஜி வாகனத்துக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.. இது பிரபாஸின் (பைரவா)வின் பக்கபலமாக அட்வைஸ் புஜ்ஜி ஆக காட்டப்படுகிறது…

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்துள்ளன குழந்தைகள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் கிராபிக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது படத்திற்கு சிறப்பு..

கமல் வாழ்ந்து வரும் காம்ப்ளேக்‌ஷ் உலகம் பிரமாண்டம்… அதுபோல கலை இயக்குனர் மற்றும் காஸ்ட்யூம் டிசைனரை பாராட்டி ஆக வேண்டும்.. அவர்களின் பங்களிப்பு படத்திற்கு பேருதவி..

ஒளிப்பதிவு ஹைக்ளாஸ்.. கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.. சந்தோஷ் நாரயணன் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை.. பின்னணி இசை மிரட்டல் ரகம்..

நாக் அஸ்வின் என்பவர் இயக்கியிருக்கிறார்.. மகாபாரத இதிகாச கதையை வைத்து அதில் பிரம்மாண்டம் காட்டி கல்கி படத்தை அதிரடியாக கொடுத்து இருக்கிறார்… இரண்டாம் பாதி எடுத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் படத்தை நீட்டி விட்டார்.. வெறுமனே கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் அல்லாமல் மகாபாரத போர்க்கள காட்சிகளையும் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *