திரை விமர்சனம்

அஞ்சாமை விமர்சனம் 3.75/5.. நீட் நல்லதா.?

படத்தின் முதல் காட்சியில்.. விதார்த் மகன் ஒரு காவல் நிலையத்திற்கு சென்று அரசாங்கம் மீது புகார் அளிக்க வேண்டும் என்கிறார்.. அரசு அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்கிறார்.. இதனை அடுத்து போலீஸ் அதிகாரி ரகுமான் அதிர்ச்சி அடைகிறார்.

விதார்த் ஒரு மேடை நாடக கலைஞர்.. தன் மனைவி வாணி போஜன் மற்றும் மகன் மகளுடன் விவசாயம் செய்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்.

தன் மகனையும் இந்த கலையில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் நினைக்கையில் மனைவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஒரு கட்டத்தில் மனைவியின் மனநிலையை புரிந்து கொண்டு மகனை நன்றாக படித்து வைக்கிறார். மகனும் தந்தை மற்றும் தாயின் கஷ்டங்களை புரிந்து கொண்டு பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக திகழ்கிறார்.

இதனையடுத்து மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.. அதன்படி மகனை நன்றாக படிக்க வைக்க போராடுகிறார் விதார்த்.

2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மருத்துவ படிப்புக்கு தகுதி தேர்வாக நீட் மத்திய அரசால் அறிமுகப்படுத்துகிறது. இதனை அடுத்து நீட் தேர்வுக்கு தன் மகனை படிக்க வைக்கிறார். இதற்காக வட்டிக்கு பணம் வாங்கி வீட்டை அடமானம் வைத்து கஷ்டப்பட்டு மகனை படிக்க வைக்கிறார்.

அப்போது நீட் தேர்வு மையமாக ஜெய்ப்பூர் என்று அவருக்கு ஹால் டிக்கெட் வருகிறது. வேறு வழியின்றி மொழி தெரியாத அந்த ஊருக்கு தன் மகனை அழைத்துக் கொண்டு சிரமப்பட்டு ட்ரெயினில் ஏறி ஜெய்ப்பூர் செல்கிறார்.. ஆனால் சரியான சமயத்தில் அவர் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்.

ஒரு வழியாக தேர்வுக்கு தன் மகனை அனுப்பி வைத்துவிட்டு உணவுக்காக அவர் அலையும்போது மயக்க நிலையில் மரணம் அடைகிறார் விதார்த்.

அதன்பிறகு என்ன நடந்தது? நீட் தேர்வில் மகன் வெற்றி பெற்றாரா.? தன் தந்தையின் கனவை நிறைவேற்றினாரா.? எதற்காக அரசாங்கத்தின் மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றார்? இன்ஸ்பெக்டர் ரகுமான் மனுவை ஏற்றுக்கொண்டாரா.? என்பதே மீதிக்கதை..

* Vidaarth – Sarkar
* Vani Bhojan – Sarasu
* Rahman – Manickam
* Krithik Mohan – Arunthavam
* Vijay Tv Ramar – Adhisayam
* Dhanya – Adhira

மைனா படம் தொடங்கி பல படங்களில் தன் கேரக்டர்காக மெனக்கெடும் நடிகர்களில் ஒருவர் விதார்த்.. இந்தப் படத்தில் பாதி மட்டுமே தான் இருந்தாலும் தன் கேரக்டரை முழுவதுமாக நிறைவு செய்து இருக்கிறார் விதார்த்.. தன் மகனுக்காக ஓடி ஓடி உழைக்கும் ஒரு தந்தையை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.

விதார்த் கேரியரில் இந்த படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும்.. வட இந்தியாவுக்கு ட்ரெயினில் செல்லும் போது அவர்படும் சிரமங்கள் ரயில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.. அவருக்கு விருதுகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு..

தனக்கு வரும் கேரக்டர்கள் எல்லாம் ஒப்புக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதையை மன நிறைவாக செய்யும் நாயகிகளில் ஒருவர் வாணி போஜன்.. இந்த படத்திலும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அம்மாவாக அவர் வாழ்ந்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேர்மையான போலீஸ் அதிகாரி நேர்மையான வக்கீல் என இரண்டு கேரக்டர்களை நிலை நிறுத்தி இருக்கிறார் நடிகர் ரகுமான்.. அடடடா இப்படி ஒரு நேர்மையான அதிகாரி நமக்கு கிடைக்க மாட்டாரா என சாமானியன் ஏங்கும் அளவிற்கு அந்த கேரக்டர் நிறுத்தி இருக்கிறார்.

தனக்கு வக்கீல் இல்லை என்றாலும் தன்னால் எதிர்த்துப் போராட முடியும் என்று மாணவன் அருந்தவம் கேரக்டரில் அருமையாக நடித்திருக்கிறார் க்ர்த்திக் மோகன்.. இந்த வயதில் இப்படி ஒரு சவாலான வேடத்தை அவர் ஏற்று இருப்பது பாராட்டுக்குரியது.

விஜய் டிவி ராமர் மற்றும் ரேகா தன்யா உள்ளிட்டோர் கதையின் ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

நீதிபதியாக நடித்த நிஜ ஐஏஎஸ் அதிகாரி அந்த கேரக்டரை வெகு சிறப்பாக செய்திருக்கிறார்.

Presented by: Dream Warrior Pictures
Production: Thiruchithram
Created & Produced: Dr. M. Thirunavukarasu MD
Written and Directed by: SP Subburaman
Cinematography: Karthick
Music: Raghav Prasad
Trailer & Background Music Score: KalaCharan
Lyrics: Arivumathi, Karthik Netha, SP Subburaman
Editor : Ramsudharsan
Art: GC Anandhan
Costume Designer: Siva Balan
PRO : Johnson

நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாதா என்ற விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த  தகுதி தேர்வுக்காக மாணவர்கள் படும் கஷ்டங்களை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.. அதற்காக ஒவ்வொரு குடும்பமும் எப்படியெல்லாம் சிரமப்படுகிறது என்பதையும் யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் சுப்புராமன்.

மேலும் இது போன்ற திடீர் சட்டங்கள் வரும்போது அதற்கான நடைமுறைகளை ஒழுங்கு படுத்த வேண்டும் அரசாங்கமும் ஒவ்வொரு அரசு அதிகாரிகளுக்கும் பொறுப்பு வேண்டும் என்று செருப்படி கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

ராகவ் பிரசாத் இசையில் பாடல்கள் அருமை.. முக்கியமாக பின்னணி இசையில் உணர்வுகளை காட்டியிருக்கும் விதம் சிறப்பு

கார்த்திக் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை.. கிராமத்து அழகு தேர்வு எழுதும் அறையில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் என ஒவ்வொன்றையும் அழகாக காட்டி இருக்கிறார்.

முக்கியமாக கலை இயக்குனர் ஆனந்தன் கை வண்ணத்தில் உருவான கோர்ட்டு அரங்கு காட்சிகள் சூப்பர்.. ஒரு அழகான கோர்ட் காட்சியை வசனங்களால் அதிரவிட்டிருக்கிறார் வசனகர்த்தா இயக்குனர் சுப்புராமன்.

அரசு வக்கிலும் மாணவனுக்கு ஆதரவாக பேசும் வக்கீல் ரகுமானும் அசத்தல்.. நம்மை அறியாமல் பல காட்சிகளில் நம்மை கைதட்ட வைத்து விடுகிறார் இயக்குனர்..

ஆக இந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் அஞ்சாமை படம் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை..