வரலட்சுமி தன் கணவருடன் (கணேஷ் வெங்கட்ராம்) வசித்து வருகிறார்.. இவர்களுக்கு ஒரு மகள் ரியா. ஆனால் தன் கணவருக்கு வேறு பெண்களிடம் தொடர்பு இருப்பதை அறிந்த வரலட்சுமி அவரை பிரிந்து ஒரு காட்டு பகுதியில் உள்ள ஒரு தனி வீட்டில் வசித்து வருகிறார்.

வருமானத்திற்காக வேலை தேடி அலைகிறார்.. கணவரும் தன் மகள் தனக்கு வேண்டும் என பிரச்சனை செய்கிறார்..

இந்த சூழ்நிலையில் வரலட்சுமி உடன் வளரும் குழந்தை தன்னுடைய சொந்த மகள் என உரிமை கூறுகிறார் மைம் கோபி.

இதனால் வேறு வழியின்றி தன் நண்பர் வக்கீல் ராகுலை நாடுகிறார். ஆனால் அவரோ மைம் கோபி ஏற்கனவே இறந்துவிட்டார். பின்னர் உன்னிடம் எப்படி பிரச்சினை செய்வார் என்கிறார்.

இதனால் குழப்பமான மனநிலையில் காணப்படுகிறார் வரலட்சுமி.

இறந்தவர் ஒருவர் எப்படி உரிமை கோர முடியும்? இறந்ததாக கருதப்படும் மைம் கோபி வரலட்சுமி கண்ணில் மட்டும் தெரிவது எப்படி? குழந்தை என்ன ஆனது? கணவர் என்ன செய்தார்? வரலட்சுமி என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், மதுநந்தன், ஜபர்தஸ்த் பானி, ஷஷாங்க் சித்தம்செட்டி, ரிஷிகா பாலி, மைம் கோபி, கேசவ் தீபக் மற்றும் பலர்.

வரலட்சுமி இந்த பட கதையின் நாயகி.. ஆக்சன் எமோஷன் பாசம் பரிதவிப்பு என அனைத்து எமோஷனலையும் அழகாக கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்..

நாயகி வரலட்சுமியை படம் முழுவதும் மைம் கோபி துரத்திக் கொண்டே வந்தாலும் ஒரே போல ரியாக்ஷனை முழுவதுமே காண்பித்துக் கொண்டே இருக்கிறார். தூரத்தில் நின்று பார்ப்பது.. அருகில் நின்று பார்ப்பது என முறைத்துக் கொண்டே இருக்கிறார்..

ஸ்மார்ட் ஆக வரும் கணேஷ்க்கு பெரிதாக வேலை இல்லை.. ஆனால் கொடுத்த பாத்திரத்தில் ஸ்டைலிஷ் நாயகனாக கைத்தட்டல் பெறுகிறார்.

இயக்குனர்: அனில் காட்ஸ்

தயாரிப்பாளர்: மகேந்திரநாத் கோண்ட்லா, மகரிஷி கோண்ட்லா

கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மே மாதம் 3 ஆம் தேதி இப்படம் வெளியானது..

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுத்துள்ளது.. இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.

தெலுங்கு இயக்குனர் அணில் என்பவர் இயக்கியிருக்கிறார்.. முதலில் தெலுங்கில் படத்தை எடுத்து பின்னர் தமிழில் டப்பிங் கொடுத்து மாற்றம் செய்திருக்கின்றனர்.. எனவே நிறைய காட்சிகளில் தெலுங்கு படத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

வரலட்சுமி கணேஷ் மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் இருந்தாலும் தெலுங்கு படத்திற்கான சாயல் அதிகமாகவே தென்படுகிறது.

ஒரு குழந்தைக்காக வரலட்சுமி கணேஷ் கோபி உள்ளிட்ட மூவர் தேடும் திரைக்கதை தான் படம் என்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் கொஞ்சம் குழப்பமான திரைக்கதை அமைத்திருக்கிறார்.

முக்கியமாக மைம் கோபி இறந்துவிட்டார் என ஒரு குழப்பம் ஏற்படுத்தி.. ஆனால் கிளைமாக்ஸில் அதற்கான தீர்வை கொடுத்து படத்தை நிலை நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் அணில்.

ஆக சபரி.. ஒரு குழந்தைக்காக தாயின் போராட்டம்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-06-at-09.58.20-682x1024.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-06-at-09.58.20-150x150.jpegrcinemaதிரை விமர்சனம்வரலட்சுமி தன் கணவருடன் (கணேஷ் வெங்கட்ராம்) வசித்து வருகிறார்.. இவர்களுக்கு ஒரு மகள் ரியா. ஆனால் தன் கணவருக்கு வேறு பெண்களிடம் தொடர்பு இருப்பதை அறிந்த வரலட்சுமி அவரை பிரிந்து ஒரு காட்டு பகுதியில் உள்ள ஒரு தனி வீட்டில் வசித்து வருகிறார். வருமானத்திற்காக வேலை தேடி அலைகிறார்.. கணவரும் தன் மகள் தனக்கு வேண்டும் என பிரச்சனை செய்கிறார்.. இந்த சூழ்நிலையில் வரலட்சுமி உடன் வளரும் குழந்தை தன்னுடைய சொந்த...